Header Logo
ஜோதிடம்
இன்றைய ராசிப்பலன் (21.08.2026)!

Aug 21, 2026 - 09:44 AM

இன்றைய ராசிப்பலன் (21.08.2026)!
Mobitel Inner 1278

இன்று (21) விருச்சிக ராசியில் சந்திரன் சஞ்சாரம் செய்கிறார். மேலும் சித்த யோகம் உள்ளது. இன்று நவகிரக தலைவன் சூரியன் சிம்ம ராசியில் இருப்பதோடு அவருடன் கேது, புதன் சேர்ந்துள்ளனர். மேலும் இன்று சனி, குரு, சந்திரன் ஆகியோர் திரிகோண யோகத்தை உருவாக்குகின்றனர். மேலும் உச்சம் பெற்ற குருவுடன், நீசம் பெற்ற சந்திரன் அமர்வால் நீச பங்க யோகம் உருவாகிறது. இன்று மேஷம் ராசியை சேர்ந்த அஸ்வினி, பரணி நட்சத்திரத்திற்கு சந்திராஷ்டம நாள். 

மேஷம் ராசி பலன் 

மேஷ ராசி அன்பர்களுக்கு இன்று தனிநபர், வங்கி அல்லது நிறுவனத்திடமிருந்து கடன் வாங்கும் யோசனையில் உள்ளவர்கள் நன்கு யோசித்துச் செயல்படவும். பழைய நண்பர்களை சந்திக்கவும் அவர்களின், ஆதரவு கிடைக்கவும் வாய்ப்புகள் உண்டு; நல்ல நண்பர்களின் வட்டமும் விரிவடையும். இன்று உங்கள் மனைவியிடமிருந்து சிறந்த ஆதரவைப் பெறுவீர்கள். மாலைப் பொழுதை குடும்பத்தினருடன் மகிழ்ச்சியாகக் கழிப்பீர்கள். உங்களுடைய தொழில் மற்றும் நிதிநிலை தொடர்பான முன்னேற்றத்தை காண முடியும்.மாணவர்கள் உயர்கல்வி தொடர்பான முயற்சிகளில் வெற்றி பெறலாம். 

ரிஷபம் ராசி பலன் 

ரிஷப ராசி அன்பர்களுக்கு இன்று மிகவும் பரபரப்பான நாளாக இருக்கும். அதிக அலைச்சலைத் தவிர்த்து கவனமாக இருக்கவும். உங்கள் முடிவெடுக்கும் திறன் இன்று உங்களுக்குப் பயனளிக்கும். அதே சமயம் உங்களுடைய நிதி விஷயங்களில் எதிர்பாராத ஆதாயங்களைப் பெறுவீர்கள். நிலுவையில் உள்ள பணிகள் இன்று நிறைவடையும். உங்களுடைய தந்தையிடமிருந்து எதிர்பார்த்த அன்பை, ஆதரவை பெறுவீர்கள் மாலையில் ஒரு சுப நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சி நிறைந்ததாக இருக்கும். 

மிதுனம் ராசி பலன் 

மிதுன ராசி அன்பர்களுக்கு இன்று இன்றைய இடங்களில் எதற்கு காரணம் அதை சமாளித்து வெற்றி பெறக் கூடிய அற்புதமான நாள். உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்தால், இன்று உங்கள் சிரமம் அதிகரிக்கக்கூடும். உங்கள் சமூக நடவடிக்கைகளில் இன்று தடைகள் ஏற்படலாம். இருப்பினும் கலங்காமல் முயற்சிகளை மேம்படுத்தவும். உங்கள் குழந்தைகளிடமிருந்து உற்சாகமூட்டும் செய்திகளைப் பெறுவீர்கள். இன்று நீங்களும் உங்களுடைய உறவினர்களை சந்திக்க வாய்ப்பு கிடைக்கும். திருமண வாழ்க்கையில் இனிமையான அனுபவம் கிடைக்கும். மாலை முதல் இரவு வரை இசை மற்றும் பாடுவதில் ஆர்வம் காட்டுவீர்கள். 

கடகம் ராசி பலன் 

கடக ராசி அன்பர்களுக்கு இன்று அதிர்ஷ்டம் மற்றும் நற்பலன்கள் நிறைந்த நாளாக இன்று அமையும். பணியிடத்தில் சக ஊழியர்களுடன் இருந்து எதிர்பார்த்த ஆதரவு கிடைக்கும். மேலும் புதிய திட்டங்களை பணிகளையும் மேற்கொள்ளலாம். உங்கள் கடின உழைப்பு நல்ல பலன்களைத் தரும். குழந்தைகள் மீதான உங்கள் நம்பிக்கை வலுப்படும். தாய்வழி உறவினர்களிடமிருந்து அன்பையும் சிறப்பான ஆதரவையும் பெற வாய்ப்புள்ளது. இன்று உங்கள் பெற்றோரைச் சிறப்பாகக் கவனித்துக்கொள்ளுங்கள்; நீங்கள் விரும்பும் ஆசீர்வாதங்களைப் பெற வாய்ப்புள்ளது. 

சிம்மம் ராசி பலன் 

சிம்ம ராசி அன்பர்களுக்கு இன்று கலவையான பலன்கள் கிடைக்கும் நாள். மன அமைதியின்மை, சோகம் மற்றும் சோர்வு காரணமாக உங்கள் கவனம் சிதறக்கூடும். இன்று அரசு பணிகள் தொடர்பான விஷயங்களில் வெற்றி காண்பீர்கள். மேலும் உங்களுடைய செயல்படனும், அனுபவம் உங்களுடைய பணிகளை செய்து முடிப்பதற்கு, முன்னேற்றுவதற்கு உதவும். நாளின் பிற்பகுதியில் பெற்றோரின் ஆதரவும் ஆசீர்வாதமும் உங்களுக்கு நிம்மதியைத் தரும். மென்மையான சொற்களைப் பயன்படுத்துங்கள், இல்லையெனில் உறவுகளில் விரிசல் ஏற்படலாம். கண் தொடர்பான தொந்தரவுகளில் இருந்து நிவாரணம் பெறுவீர்கள். 

கன்னி ராசி பலன் 

கன்னி ராசி அன்பர்களுக்கு இன்று நீங்கள் அச்சமற்ற உணர்வுடன் இருப்பீர்கள்; மேலும் கடினமான பணிகளையும் துணிச்சலுடன் செய்து முடிப்பீர்கள். தொடர்பாக எதிரிகளை சமாளிக்க கூடிய வல்லமையுடன் செயல்படுவீர்கள். பெற்றோரிடமிருந்து முழுமையான ஆதரவையும் மகிழ்ச்சியையும் பெறுவீர்கள். உடல்நலக் குறைவு காரணமாக உங்கள் மனைவி சற்று மனவேதனைக்கு ஆளாகலாம். தேவையற்ற செலவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது. நீங்கள் மற்றவர்களின் நலனை மனதார விரும்புவீர்கள், ஆனால் மற்றவர்கள் அதை வற்புறுத்தல் அல்லது சுயநலம் என்று தவறாகப் புரிந்துகொள்ளலாம். தொழிலில் நிதி ரீதியான ஆதாயம் அடைவீர்கள். 

துலாம் ராசி பலன் 

துலாம் ராசி அன்பர்களுக்கு இன்று உங்களுக்கு ஒரு சுபமான நாள். வண்டி வாகனம் வாங்கக்கூடிய முயற்சியில் இருப்பவர்கள் அதில் வெற்றியை காண்பார்கள். கடக ராசியில் உள்ள குரு பகவான் கர்ம ஸ்தானமான பத்தாம் வீட்டில் அமர்ந்துள்ளதால், இன்று உங்கள் குருவின் மீது முழுமையான பக்தியையும் விசுவாசத்தையும் கொண்டிருக்க வேண்டும். சொத்து தொடர்பான விஷயங்களில் இருக்கும் பிரச்சனைகள் விலகும். புதிய முயற்சிகளில் முதலீடு செய்ய நேரிட்டால், அது சுபமானதாக அமையும். 

விருச்சிகம் ராசி பலன் 

விருச்சிக ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் மனம் சஞ்சலத்துடனும், கவலையுடனும் காணப்படும். தொழிலை விரிவுபடுத்துவதற்காக நீங்கள் இருக்கக்கூடிய முயற்சிகள் பலனளிக்காமல் போகலாம். இருப்பினும், உங்களுடைய முயற்சிகளை குறைத்துக் கொள்ள வேண்டாம். உங்களுடைய இதுதான் இந்த விஷயங்களை உணர்ச்சி வசப்படாமல் சந்தித்த முடிவு எடுக்கவும். மாலை வேளையில் உங்கள் பொறுமை மற்றும் சமயோசித புத்தியால் எதிரிகளை வெல்வீர்கள். ஏதேனும் சட்டரீதியான அல்லது அதிகாரப்பூர்வமான தகராறுகள் நிலுவையில் இருந்தால், அதில் வெற்றி கிடைக்க நல்ல வாய்ப்புள்ளது. 

தனுசு ராசி பலன் 

தனுசு ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் கல்வி அறிவு, புத்திசாலித்தனம் மற்றும் ஞானம் ஆகியவை அதிகரிக்கும். நீங்கள் சிந்தித்து எடுக்கக்கூடிய முயற்சிகள் மற்றும் முடிவுகள் மூலம் எதிர்காலத்தில் நல்ல பலனை தரக்கூடியதாக இருக்கும். உங்களிடம் தர்மம் மற்றும் பிறருக்கு உதவும் மனப்பான்மை வளரும். ஆன்மீக வழிபாடுகள் மற்றும் சடங்குகளில் ஆர்வம் காட்டி முழுமையாக ஈடுபடுவீர்கள். அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவும் கிடைக்கும்; இதனால் உங்கள் நிதி நிலைமை வலுவடையும். மாலை நேரத்தில் சிலருக்கு வயிறு தொடர்பான உபாதைகள் ஏற்பட வாய்ப்புள்ளது; எனவே உணவு விஷயத்தில் கவனமாகவும் அளவோடும் இருங்கள். 

மகரம் ராசி பலன் 

மகர ராசி அன்பர்களுக்கு இன்று மதிப்புமிக்க பொருட்களை வாங்கும் அதே வேளையில், விரும்பாத போதிலும் சில தேவையற்ற செலவுகளைச் செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்படும். அதனால் நிதி விஷயங்களை பட்ஜெட் போட்டு செயல்படுவோம். தொழிலில் ஆர்வம் காட்டுவீர்கள், இதன் மூலம் நிலுவையில் உள்ள பணிகள் வெற்றிகரமாக முடிவடையும். பணியிடத்தில் உங்களுடைய பொறுமையான செயல்பாடுகள், ஊழியர்களை அனுசரித்து செல்வது போன்ற விஷயங்களில் பதற்றத்தை குறைக்கும். புதிதாக ஏதேனும் முதலீடு செய்ய நேர்ந்தால் தாராளமாகச் செய்யலாம்; அது எதிர்காலத்தில் நன்மைகளைத் தரும். 

கும்பம் ராசி பலன் 

கும்ப ராசி அன்பர்களுக்கு இன்று ஞானத்துடனும், விவேகத்துடனும் புதிய விஷயங்களை ஆராய்ந்து அறியும் நாளாக அமையும். உங்களுடைய குடும்ப பொறுப்புகள் மற்றும், மேலே வேகமாக முடிக்க கூடிய தன்னம்பிக்கை மனதில் ஏற்படும். தேவைக்கேற்பவும் வரம்பிற்கு உட்பட்டும் மட்டுமே செலவு செய்யுங்கள். குடும்ப உறுப்பினர்களிடமிருந்து துரோகம் அல்லது ஏமாற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. உலகியல் இன்பங்களையும் பணியாளர்களின் சேவையால் கிடைக்கும் வசதிகளையும் அனுபவிப்பீர்கள். மாலை முதல் இரவு வரை மேற்கொள்ளும் ஒரு சிறிய பயணம் நன்மை பயப்பதாக அமையும். 

மீனம் ராசி பலன் 

மீன ராசி அன்பர்களுக்கு இன்று உங்கள் ராசி அதிபதி ஐந்தாம் வீட்டில் குரு பகவான்) சஞ்சரிப்பதால், உங்கள் பிள்ளைகள் தொடர்பான நீண்ட காலப் பிரச்சனை ஒன்று தீரும். இன்று பிறரிடம் பேசும் போதும், வாக்குறுதிகளை கொடுக்கும் போது கவனம் தேவை. முடிந்தவரை யாருக்கும் வாக்குறுதிகளை கொடுக்க வேண்டாம். உங்கள் மகிழ்ச்சியான சுபாவம் மற்றவர்களை உங்களுடன் இணையத் தூண்டும். சமூகத்தில் கிடைக்கும் அங்கீகாரம் உங்கள் மன உறுதியை அதிகரிக்கும்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

தண்டாயுதபாணி உற்சவம்!

தண்டாயுதபாணி உற்சவம்!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

Mobitel 1278