Header Logo
SLIC
Rhythams of Lanka
செய்திகள்
பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி காலமானார்

Aug 21, 2026 - 04:16 PM

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி காலமானார்
Mobitel Inner 1278
EDEX Inner

பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகிக்கு உடல் நலக்குறைவு காரணமாக தனது 94 ஆவது வயதில் காலமானார். 
 
சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள வீட்டில் வசித்து வந்த நிலையில் உடல் நலக்குறைவு  காரணமாக அங்குள்ள தனியார் வைத்தியசாலையில் தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டிருந்தார். 

இந்நிலையில், சிகிச்சை பலனின்றி நடிகை சவுகார் ஜானகி காலமானதாக இந்திய செய்திகள் தெரிவிக்கின்றன.

1931-ம் ஆண்டு பிறந்த சவுகார் ஜானகி, 1950-களில் திரையுலகில் கதாநாயகியாக அறிமுகமாகி தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்து தனக்கென தனி இடத்தைப் பிடித்தவர். 

சிவாஜி கணேசன், எம்.ஜி.ஆர்., ஜெமினி கணேசன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுடன் இணைந்து ஏராளமான படங்களில் நடித்துள்ளார். 

400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ள அவர், கலைத்துறையில் ஆற்றிய பங்களிப்புக்காக 2022-ம் ஆண்டு பத்மஸ்ரீ விருதும் பெற்றுள்ளார். ஆந்திர மாநிலத்தை பூர்விகமாக கொண்டவர் இவர். 

கடந்த 1950ஆம் ஆண்டு, ‘சவுகார்’ என்ற தெலுங்கு திரைப்படத்தில் அறிமுகமான சவுகார்ஜானகி, 70 ஆண்டுகளில் 400-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார். 

தமிழில் கடைசியாக, 2020ஆம் ஆண்டு சந்தானம் நடிப்பில் வெளியான ‘பிஸ்கோத்’ படத்தில் நடித்திருந்தார். இந்தப் படம் சவுகார் ஜானகிக்கு 400-வது படம் என்பது குறிப்பிடத்தக்கது.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278