Aug 21, 2026 - 05:47 PM





விஜய்யின் கடைசி திரைப்படமாக உருவான ‘ஜனநாயகன்’ தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக பல ஆண்டுகளாக இரசிகர்களை கவர்ந்த விஜய், தற்போது அரசியலில் முழுமையாக கவனம் செலுத்தி வருகிறார். அவர் நடித்த கடைசி திரைப்படமாக உருவான ‘ஜனநாயகன்’, இயக்குநர் எச்.வினோத் இயக்கத்தில் ஜூலை 23 ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது.
‘ஜனநாயகன்’ திரைப்படம் வெளியாவதற்கு முன்பும், வெளியான பிறகும் பல்வேறு சவால்களை சந்தித்தது. குறிப்பாக, திரையரங்குகளில் படம் வெளியான சில மணி நேரங்களிலேயே சட்டவிரோதமாக இணையத்தில் கசிந்தது. இருப்பினும், விஜய்யின் கடைசி திரைப்படம் என்பதால் ரசிகர்கள் பெருமளவில் திரையரங்குகளுக்கு சென்று படத்தை கொண்டாடினர்.
தமிழகம் மட்டுமின்றி இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும், வெளிநாடுகளிலும் ‘ஜனநாயகன்’ திரைப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்ததாக கூறப்படுகிறது. இதன் மூலம் படம் உலகளவில் ரூ.350 கோடிக்கும் அதிகமாக வசூலித்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்த நிலையில், திரையரங்குகளில் வெளியான ‘ஜனநாயகன்’ திரைப்படம் தற்போது ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது. இன்று முதல் (21) முதல் ஜீ5 ஓடிடி தளத்தில் ‘ஜனநாயகன்’ திரைப்படத்தை ரசிகர்கள் காணலாம். திரையரங்குகளில் படத்தை பார்க்கத் தவறிய விஜய் ரசிகர்களுக்கு இந்த ஓடிடி வெளியீடு மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

























