Header Logo
SLIC
செய்திகள்
பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் மாயம்

Aug 24, 2026 - 08:47 AM

பதுளை போதனா வைத்தியசாலையின்  விசேட வைத்தியர் ஒருவர் மாயம்
Mobitel Inner 1278
EDEX Inner

பதுளை போதனா வைத்தியசாலையின் விசேட வைத்தியர் ஒருவர் காணாமல் போயுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

குறித்த விசேட வைத்தியர் நேற்று (23) காலை கடமையில் ஈடுபட்டிருந்த போதிலும், அதன் பின்னர் இவ்வாறு காணாமல் போயுள்ளார். 

இது தொடர்பில் ஆராய்ந்த போது, வைத்தியரின் கார் மஹியங்கனை திசையை நோக்கிப் பயணிப்பது மீகஹகிவுல பகுதியில் உள்ள சிசிடிவி (CCTV) காணொளியில் பதிவாகியுள்ளமை அவதானிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளின் போது, பதுளை - மஹியங்கனை வீதியின் 17ஆம் கட்டை, மாப்பாக்கடவெவ பகுதியில் வைத்து வைத்தியரின் கார் நேற்றிரவு கண்டுபிடிக்கப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர். 

இதற்கமைவாக, காணாமல் போன வைத்தியரைத் தேடும் நோக்கில் இன்றைய தினம் அப்பகுதியில் பொலிஸார், குற்றச் சம்பவ இடங்களை ஆராயும் தடயவியல் அதிகாரிகள் மற்றும் இராணுவத்தினர் இணைந்து கூட்டுத் தேடுதல் நடவடிக்கையொன்றை முன்னெடுக்கவுள்ளதாகவும் பொலிஸார் மேலும் குறிப்பிட்டுள்ளனர்.

MOST READ

காணொளி
இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

இது எனது கடைசி உரையாக இருக்கலாம்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

மனிதாபிமானத்துடன் அந்த பெண் ஊழியர்களை பாருங்கள்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

சிறுவர்களுக்கு கட்டாய கல்வியை உறுதிப்படுத்த வேண்டும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

இது தேசிய ஒற்றுமைக்குப் பாரியதொரு அச்சுறுத்தலாகும்!

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

ஒற்றுமையை சீர்குலைப்பதற்கான முயற்சி

Mobitel 1278