Aug 24, 2026 - 05:02 PM





கொழும்பு SSC அரங்கில் நடைபெற்று வரும் இலங்கைக்கு எதிரான 2ஆவது டெஸ்ட் போட்டியின் 2ஆவது நாளில், இந்தியா தனது முதல் இன்னிங்ஸில் 9 விக்கெட் இழப்பிற்கு 503 ஓட்டங்களைப் பெற்று இன்னிங்ஸை இடைநிறுத்திக் கொண்டது.
இந்திய அணி சார்பில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய துருவ் ஜூரெல் ஆட்டமிழக்காமல் 115 ஓட்டங்களையும், தேவ்தத் படிக்கல் 117 ஓட்டங்களையும், சுப்மன் கில் 50 ஓட்டங்களையும் குவித்தனர்.
இலங்கை அணியின் பந்துவீச்சில் அசித பெர்னாண்டோ 4 விக்கெட்டுகளையும், பிரபாத் ஜெயசூர்ய 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
வலுவான ஓட்ட எண்ணிக்கையை எதிர்த்து இலங்கை அணி அடுத்து தனது முதல் இன்னிங்ஸ் துடுப்பாட்டத்தைத் தொடங்கவுள்ளது.























