Aug 25, 2026 - 05:40 PM





`தர்மன்' படப்பிடிப்பு தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் தற்போது தனது 173 ஆவது திரைப்படமான 'தர்மன்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தை 'ஓ மை கடவுளே', 'டிராகன்' ஆகிய படங்களின் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து இயக்கி வருகிறார். கமல்ஹாசனின் ராஜ்கமல் பிலிம்ஸ் இன்டர்நேஷனல் நிறுவனம் தயாரிக்கும் இந்த திரைப்படம் ஆக்சன் கதைக்களத்தில் உருவாகி வருகிறது.
இதில் ரஜினிகாந்த் வைத்தியர் கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். மேலும் இந்த படத்தில், சிம்ரன், ஸ்ரேயா சரண், ராஷி கன்னா, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். அனிருத் இசையமைக்கும், இந்த படத்துக்கு நிகேத் பொம்மி ஒளிப்பதிவு செய்கிறார். பிரதீப் ஈ ராகவ் படத்தொகுப்பு செய்கிறார்.
'தர்மன்' படத்தின் 2 ஆம் கட்ட படப்பிடிப்பு தற்போது தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இதுதொடர்பான அறிவிப்பை வீடியோ ஒன்றை வெளியிட்டு சமீபத்தில் படக்குழு அறிவித்துள்ளது.
இந்த நிலையில், `தர்மன்' படப்பிடிப்பு தளத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி காந்துடன் செல்பி எடுத்துக்கொண்ட புகைப்படத்தை நடிகை ஸ்ரேயா சரண் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், "ஒரு ஜாம்பவானைச் சந்திக்கும்போது, ஒரு புகைப்படம் எடுத்துக்கொள்வது அவசியம்தானே?" என்று பதிவிட்டுள்ளார். இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.























