Header Logo
SLIC
இந்தியா
பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவுகிறது!

Aug 27, 2026 - 10:24 AM

பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவுகிறது!
Mobitel Inner 1278
EDEX Inner

லேசான சளி, காய்ச்சல் அல்லது இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் அதை சாதாரணமாக எண்ணி அலட்சியப்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தியாவின் தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே, எச்1என்1 வகையைச் சேர்ந்த பன்றிக் காய்ச்சல் நோய் தொற்று வேகமாகப் பரவி வருகிறது. 

தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்து வருவதால், பொது சுகாதாரத்துறை மற்றும் மத்திய சுகாதாரத்துறை சார்பில் முக்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டு உள்ளன. 

கடந்த ஜனவரி மாதத்தில் 19 ஆக இருந்த பன்றிக்காய்ச்சல் பாதிப்பு எண்ணிக்கை, தற்போது 339 ஆக அதிர்ச்சி தரும் வகையில் உயர்ந்துள்ளது. இதன் காரணமாக மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள அரசு மற்றும் தனியார் வைத்தியசாலைகளில் காய்ச்சல் வார்டுகளில் நோயாளிகளின் கூட்டம் கணிசமாக அதிகரித்து வருகிறது. காய்ச்சல், இருமல், தொண்டை வலி, மூக்கு ஒழுகுதல், கடுமையான தலைவலி, உடற்சோர்வு மற்றும் பசியின்மை ஆகியவை பன்றிக்காய்ச்சலின் முதன்மை அறிகுறிகளாகும். மேலும் சிலருக்கு மூட்டு மற்றும் தசை வலி, குமட்டல், வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு போன்ற பாதிப்புகளும் ஏற்படக்கூடும். 

லேசான சளி, காய்ச்சல் அல்லது இருமல் போன்ற அறிகுறிகள் தென்பட்டால் பொதுமக்கள் அதை சாதாரணமாக எண்ணி அலட்சியப்படுத்தக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, எந்தவொரு மருந்தகங்களிலும் தானாகச் சென்று மருந்துகளை வாங்கி உட்கொள்ளும் சுய மருத்துவத்தை கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். 

அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக அருகில் உள்ள அரசு அல்லது தனியார் சுகாதார மையங்களை அணுகி, உரிய வைத்தியப் பரிசோதனைகளை மேற்கொண்டு சிகிச்சை பெற வேண்டும் என பொது சுகாதாரத்துறை மற்றும் மத்திய சுகாதாரத்துறை அறிவுறுத்தியுள்ளன. உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளைப் பின்பற்றுவதன் மூலமே இத்தொற்று பரவலை முழுமையாகக் கட்டுப்படுத்த முடியும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.


MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278