Header Logo
SLIC
செய்திகள்
கெப்பித்திகொல்லாவ விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் பலி

Aug 27, 2026 - 11:01 AM

கெப்பித்திகொல்லாவ விபத்தில் கைக்குழந்தை உட்பட மூவர் பலி
Mobitel Inner 1278
EDEX Inner

கெப்பித்திகொல்லாவ பகுதியில் உள்ள விகாரை ஒன்றுக்கு அருகில் இன்று (27) முற்பகல் இடம்பெற்ற வாகன விபத்தில் 10 நாட்களேயான கைக்குழந்தை உட்பட மூவர் உயிரிழந்தனர். 

பதவிய சிறிபுர பகுதியில் இருந்து அநுராதபுரம் நோக்கிப் பயணித்த முச்சக்கரவண்டியும், அநுராதபுரத்திலிருந்து கெப்பித்திகொல்லாவ நோக்கிப் பயணித்த கெப் வண்டியும் நேருக்கு நேர் மோதியதிலேயே இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. 

இந்த விபத்தில் முச்சக்கரவண்டியின் சாரதி, அவரது தாய் மற்றும் 10 நாட்களேயான கைக்குழந்தை ஆகியோரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. 

முச்சக்கரவண்டியில் பயணித்தவர்கள் அநுராதபுரம் போதனா வைத்தியசாலைக்குச் சென்று கொண்டிருந்த போதே இந்த கோர விபத்திற்கு முகங்கொடுத்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

இந்த விபத்து தொடர்பில் கெப்பித்திகொல்லாவ பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

MOST READ

காணொளி
புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

நாட்டில் நெல் களஞ்சியசாலைகள் அதிகமாகவே உள்ளன!

Mobitel 1278