Aug 27, 2026 - 01:23 PM





பிரபல ஹாலிவுட் நடிகரும் பாடகருமான டிம் கர்ரி தனது 80 ஆவது வயதில் காலமானார்.
லாஸ் ஏஞ்சலஸில் உள்ள அவரது இல்லத்தில் கடந்த 25 ஆம் திகதி அவர் காலமானாதாக அவரது மேலாளர் மார்சியா ஹர்விட்ஸ் அறிவித்துள்ளார். அவரது இறப்பிற்கான துல்லியமான காரணம் இன்னுமும் அறிவிக்கப்படவில்லை.
'தி ராக்கி ஹாரர் பிக்சர் ஷோ' திரைப்படத்தில் 'டாக்டர் பிராங்க் என் பர்ட்டர்' என்ற கதாபாத்திரத்தில் நடித்ததன் மூலம் சர்வதேச அளவில் அவர் புகழ் பெற்றார்.
இருப்பினும், 2012 ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டதில் இருந்து அவர் பல்வேறு உடல்நலக் கோளாறுகளுடன் போராடி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அவர் வாழ்நாள் முழுவதும் திருமணம் செய்து கொள்ளவில்லை. கர்ரிக்கு 12 வயது இருக்கும்போதே அமெரிக்க கடற்படையில் பணியாற்றிய அவரின் தந்தை பக்கவாதத்தால் உயிரிழந்தார்.
1999 இல் அவரின் தாயார் மார்பக புற்றுநோயால் உயிரிழந்தார். மூத்த சகோதரி 2001 இல் மூளை புற்றுநோயால் உயிரிழந்தார்.
1973 இல் லண்டனில் மேடை நாடகமாகதில் 'டாக்டர் பிராங்க் என் பர்ட்டர்' கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார்.
பின்னர் 1975 இல் அதை தழுவி 'தி ராக்கி ஹாரர் பிக்சர் ஷோ' என திரைப்படமாக உருவான போதும் அதே கதாபாத்திரத்தில் அவர் நடித்தார்.
தொடக்கத்தில் பெரிய வரவேற்பைப் பெறாவிட்டாலும், பின்னாளில் அத்திரைப்படம் உலகளவில் மிகப்பெரிய கால்ட் கிளாசிக் திரைப்படமாக உருவெடுத்தது.
2012 இல் ஏற்பட்ட பக்கவாதத்திற்கு பிறகு இவரது நடிப்புப் பயணம் தொய்வை கண்டது. பின்னர் 2024 ஆம் ஆண்டு வெளியான Stream என்ற ஹாரர் திரைப்படத்தின் மூலம் அவர் மீண்டும் திரைத்துறைக்குத் திரும்பினார்.
இசைத் துறையிலும் ஆர்வம் கொண்ட இவர், சொந்த இசைக்குழுவுடன் சேர்ந்து பல இசை ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.
இசையில் ஆவரமுள்ள அவர் பாப் இசை பாடகராகவும் வளம் வந்தார். பல்வேறு இசைக்கச்சேரிகளை அவர் அமெரிக்கா நெடுக நடத்தியுள்ளார். ஆல்பங்களையும் வெளியிட்டுள்ளார்.























