Aug 27, 2026 - 08:32 PM





கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க எசல பெரஹரா திருவிழாவின் இறுதி ரந்தோலி ஊர்வலம் இன்று (27) மாலை 6.43 மணிக்கு உள்ள சுப நேரத்தில் வீதி உலா வரத் தொடங்கியது.
தலதா வீதி, யட்டிநுவர வீதி, கந்தே வீதி, டி.எஸ். சேனாநாயக்க வீதி மற்றும் ராஜா வீதி வழியாக சுமார் 2 கிலோமீற்றர் 150 மீற்றர் தூரம் பயணிக்கும் பெரஹரா , மீண்டும் ஸ்ரீ தலதா மாளிகையை வந்தடையவுள்ளது.
இறுதி ரந்தோலி ஊர்வலத்தில் புனித தலதா பேழையை சுமந்து செல்லும் பாக்கியம் கதிர்புர வாசனா யானைக்கு கிடைத்துள்ளது.























