Aug 27, 2026 - 09:10 PM





கண்டி வரலாற்றுச் சிறப்புமிக்க ஸ்ரீ தலதா மாளிகையின் வருடாந்த எசல பெரஹரா விழாவின் நிகழ்வுகளில் கலந்து கொண்ட ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று (27) பிற்பகல் மகா சங்கத்தினரை சந்தித்து ஆசி பெற்றார்.
அதற்கமைய, முதற்கட்டமாக மல்வத்து மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, மல்வத்து மகா நாயக்க அதி வணக்கத்துக்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சுமங்கள நாயக்க தேரரைச் சந்தித்து ஆசி பெற்றார்.
அதன் பின்னர் அஸ்கிரி மகா விகாரைக்குச் சென்ற ஜனாதிபதி, அஸ்கிரி மகா நாயக்க அதி வணக்கத்துக்குரிய வரகாகொட ஸ்ரீ ஞானரதன நாயக்க தேரரையும் சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார்.























