Header Logo
SLIC
உலகம்
வெள்ள நீரில் மிதந்து வந்த சடலத்தில் இருந்து தங்க நகை திருடிய 2 பேர் கைது!

Aug 28, 2026 - 10:39 AM

வெள்ள நீரில் மிதந்து வந்த சடலத்தில் இருந்து தங்க நகை திருடிய 2 பேர் கைது!
Mobitel Inner 1278
EDEX Inner

நேபாள வெள்ளத்தில் உயிரிழந்தவர் உடலிலிருந்து தங்க நகை திருடிய இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

நேபாளத்தின் போதே கோஷி நதியில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 300 இற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். 

ஆயிரக்கணக்கானோர் காணாமல் போன நிலையில் அங்கு மீட்பு பணிகள் முழு வீச்சில் நடந்து வருகின்றன. 

வெள்ளத்தில் மிதந்து வந்த உடலிலிருந்து குச்சியை பயன்படுத்தி தங்கக் தோடை உருவியெடுக்கும் காட்சிகள் சமூக வலைதளங்களில் பரவியதையடுத்து வீடியோ காட்சிகளின் அடிப்படையில் குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டனர். 

இதன்படி சித்வான் மாவட்டத்தின் பாரத்பூரில், மதன் குருங் (25), உமேஷ் சௌத்ரி (38) ஆகிய இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர். 

குற்றவாளிகள் மிகவும் கொடூரமாகவும் மனிதநேயமற்ற முறையிலும் நடந்து கொண்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 

ஆகஸ்ட் 26 ஆம் திகதி நேபாளத்தின் போதே கோஷி நதியில் மிகப்பெரிய அளவில் திடீர் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. 

பனிச்சரிவு காரணமாக நதியில் நீரோட்டம் தடைபட்டு, பின்னர் திடீரென அணை உடைந்து நீர் பெருக்கெடுத்துப் பாய்ந்தது. இதனால் ரசுவா மற்றும் நுவாகோட் மாவட்டங்களில் கடும் வெள்ள பாதிப்பு ஏற்பட்டுள்ளது. 

காணாமல் போனவர்கள் சடலங்களாக கண்டெடுக்கப்பட்டு வரும் நிலையில் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. காணாமல் போனவர்களில் புனித பயணம் சென்ற ஏராளமான சுற்றுலாப் பயணிகளும் அடங்குவர். 

நேபாளத்தின் பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்ட தகவலின்படி, உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 392 ஆக உயர்ந்துள்ளது, இதில் மொத்தமாக 910 பேர் இன்னும் காணாமல் போயுள்ளனர்.

MOST READ
03
VFS Global கொழும்பில் எளிதில் அணுகக்கூடிய வகையில் நவீன வசதிகள் கொண்ட நிலையத்துடன் இலங்கையில் கொரியக் குடியரசிற்கான (தென் கொரியா) விசா சேவைகளை ஆரம்பிக்

VFS Global கொழும்பில் எளிதில் அணுகக்கூடிய வகையில் நவீன வசதிகள் கொண்ட நிலையத்துடன் இலங்கையில் கொரியக் குடியரசிற்கான (தென் கொரியா) விசா சேவைகளை ஆரம்பிக்

Aug 28, 2026 - 10:52 AM

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278