Header Logo
SLIC
இந்தியா
தமிழக சட்டப்பேரவை 10 மணி நேரம் நடைபெற்று சாதனை!

Aug 28, 2026 - 11:24 AM

தமிழக சட்டப்பேரவை 10 மணி நேரம் நடைபெற்று சாதனை!
Mobitel Inner 1278
EDEX Inner

தமிழ்நாடு சட்டப்பேரவை வரலாற்றில், இதுவரை இல்லாத வகையில், ஒரே நாளில் சுமார் 10 மணி நேரம் தொடர்ச்சியாக அவை அலுவல்கள் நடைபெற்றுள்ளன. 

தமிழ்நாடு சட்டப்பேரவையில் நேற்று (27) பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், சமூகநீதித்துறை மானிய கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. 

வழக்கம்போல், நேற்று காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. சட்டப்பேரவையில் காலையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், அமைச்சர்கள் செங்கோட்டையன், ஆதவ் அர்ஜூனா, என். ஆனந்த், வெங்கட்ரமணன், நிர்மல்குமார், அ.தி.மு.க. பொது செயலர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

மாலை வேளையில் சட்டப்பேரவைக்கு வந்த தமிழக முதலமைச்சர் விஜய் அவரும் சிறிது நேரம் கலந்துகொண்டார். 

சட்டப்பேரவையில் முதல்வருக்கென தனியாக பிரத்யேக இருக்கை அமைக்கப்பட்டுள்ளது. எனினும், இன்றைய சட்டப்பேரவையில் முதல்வருக்கான பிரத்யேக இருக்கையை தவிர்த்துவிட்டு, அமைச்சர்களுக்கான முன்வரிசை இருக்கையில் முதல்வர் விஜய் அமர்ந்தார். 

மானிய கோரிக்கை விவாதத்தை கடந்து, பல்வேறு விவாதங்கள் நடைபெற்றன. அதைத்தொடர்ந்து, நேற்றைய சட்டப்பேரவையில் பல்வேறு விவாதங்கள் நடந்ததால், கடந்த 25 ஆம் திகதி போலவே சட்ட பேரவைக்கூட்டம் இரவு 7 மணியையும் கடந்து தொடர்ந்தது. அதன்பின், அமைச்சர்களின் பதிலுரை ஏதும் இல்லாமலேயே இரவு 7.20 மணியளவில் அவை நிறைவடைந்தது. 

எம்.எல்.ஏ.க்கள் பலரையும் கேள்விகள் கேட்க அனுமதிப்பதை அடுத்து அவை நடைபெறும் நேரம் கடந்த சில நாள்களாக மாலை 6 மணியை தாண்டி நடைபெற்று வந்தது. இன்று மட்டும் அதிகபட்சமாக சட்டப்பேரவை சுமார் 9 மணி நேரம் 50 நிமிடங்கள் நடைபெற்றுள்ளது.

MOST READ
07
VFS Global கொழும்பில் எளிதில் அணுகக்கூடிய வகையில் நவீன வசதிகள் கொண்ட நிலையத்துடன் இலங்கையில் கொரியக் குடியரசிற்கான (தென் கொரியா) விசா சேவைகளை ஆரம்பிக்

VFS Global கொழும்பில் எளிதில் அணுகக்கூடிய வகையில் நவீன வசதிகள் கொண்ட நிலையத்துடன் இலங்கையில் கொரியக் குடியரசிற்கான (தென் கொரியா) விசா சேவைகளை ஆரம்பிக்

Aug 28, 2026 - 10:52 AM

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278