Header Logo
SLIC
செய்திகள்
கொழும்பு துறைமுகம் உலகின் முதல் 20 துறைமுகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது!

Aug 28, 2026 - 05:05 PM

கொழும்பு துறைமுகம் உலகின் முதல் 20 துறைமுகங்களில் ஒன்றாகத் திகழ்கிறது!
Mobitel Inner 1278
EDEX Inner

2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களுக்குள் கொள்கலன் செயற்பாடுகளில் 11.9% என்ற குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள கொழும்பு துறைமுகம், உலகின் பிரதான 20 கொள்கலன் துறைமுகங்களுக்குள் நுழைந்துள்ளது. 

சர்வதேச Alphaliner அறிக்கைகளின்படி, 2025 ஆம் ஆண்டின் இறுதியில் உலக தரவரிசையில் 26 ஆம் இடத்தில் இருந்த கொழும்பு துறைமுகம், இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் மாத்திரம் கொழும்பு துறைமுகம் ஊடாகக் கையாண்டுள்ள மொத்த கொள்கலன் அளவு 4.4 மில்லியனுக்கும் (4,444,034) அதிகமாகும். 

இது 2025 ஆம் ஆண்டின் தொடர்புடைய காலப்பகுதியில் கையாளப்பட்ட 3.9 மில்லியன் (3,972,053) கொள்கலன்களுடன் ஒப்பிடும் போது 4 லட்சத்துக்கும் அதிகமான (471,981) வளர்ச்சியாகும். 

இதற்கமைய, 2025 ஆம் ஆண்டில் மொத்தமாகக் கொள்கலன்களை கையாண்டு நிலைநாட்டிய சாதனையை முறியடிக்க முடியுமென இலங்கை துறைமுகங்கள் அதிகாரசபை தெரிவித்துள்ளது. 

கிழக்காசியா, தெற்காசியா, மத்திய கிழக்கு, ஆபிரிக்கா மற்றும் ஐரோப்பாவை இணைக்கும் பிரதான கப்பல் வழிகளின் மையமாகச் செயற்படும் கொழும்பு துறைமுகம், இந்தியப் பெருங்கடலின் பிரதான மீள் கப்பல் போக்குவரத்து மையமாகச் செயற்படுகின்றது. 

2026 ஜனவரி முதல் ஏப்ரல் வரை உள்ள காலப்பகுதியிலும் 2.915 மில்லியன் கொள்கலன்களை கையாண்டு கொழும்பு துறைமுகம் 13.9% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. 

வளர்ந்துவரும் கொள்கலன் கொள்ளளவிற்கு இணங்க உட்கட்டமைப்பு வசதிகள், நவீன தொழில்நுட்பம் மற்றும் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாகவும், எதிர்வரும் 1-3 ஆண்டுகளுக்குள் சுமார் 2 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீடுகளைத் துறைமுகத் துறைக்குப் பெற்றுக்கொடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அதிகாரசபை மேலும் தெரிவித்துள்ளது.


MOST READ

காணொளி
செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

யாழில் ஆலய திருவிழாவில் கண்பாதிப்பினால் பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

பலர் வைத்தியசாலையில்...

Mobitel 1278