Aug 29, 2026 - 09:26 PM





வெள்ளே சாரங்க என்ற சாரங்க பிரதீப் டுபாயில் வைத்துக் கைது செய்யப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சந்தேகநபர் கடந்த சில நாட்களுக்கு முன்னர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், லலித் கன்னங்கர எனப்படும் 'பஸ் லலித்' என்பவரைக் கைது செய்யச் சென்ற மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் மற்றும் புலனாய்வு உத்தியோகத்தர்களுக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, டுபாய் பொலிஸாரினால் இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
சந்தேகநபர் கைது செய்யப்பட்ட சந்தர்ப்பத்தில் அவரிடமிருந்து கொக்கெய்ன் மற்றும் 'ஐஸ்' போதைப்பொருட்களும் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
எனினும், சந்தேகநபரின் கைது தொடர்பில் இதுவரை இலங்கைக்கு அறிவிக்கப்படவில்லை என்றும் குறிப்பிடப்படுகின்றது.
மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்தின் பணிப்பாளர் மற்றும் தேசிய புலனாய்வுச் சேவையின் உத்தியோகத்தர்கள் வழங்கிய தகவல்களின் அடிப்படையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.























