Aug 30, 2026 - 11:17 AM





தெலுங்கு சினிமாவில் நானி நடிப்பில் உருவாகி வரும் படம் ‛தி பாரடைஸ்".
ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கும் இப்படத்தில் நாயகியாக கயாடு லோகர் நடித்துள்ளார். தவிர மோகன் பாபு, ஈஸ்வரி ராவ், சோனாலி குல்கர்னி மற்றும் ராகவ் ஜுயல் உள்ளிட்டோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைக்கிறார்.
1980களில் ஒரு ஒடுக்கப்பட்ட பழங்குடி மக்களின் குடியுரிமைப் போராட்டம் மற்றும் அமைப்பு ரீதியான அடக்குமுறைக்கு எதிரான கதையை மையமாகக் கொண்ட ஒரு அதிரடி படமாக உருவாகியுள்ளது.
படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் நடக்கின்றன.
ஏற்கனவே இப்படத்திலிருந்து ‛ஆயா ஷேர்" என்ற பாடல் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்நிலையில் இப்படத்தின் இரண்டாவது பாடலான "யேஷனகுலா" வெளியாகி உள்ளது.
இதில் சிறப்பு ரோலில் ஒரு பாட்டுக்கு ஆடி உள்ளார் நடிகை கீர்த்தி சுரேஷ். அனிருத் இசையில் ஜானகி ரெட்டி மற்றும் பிரபா பாடியுள்ள இந்த மாஸ் பாடலுக்கு நானி மற்றும் கீர்த்தி சுரேஷின் குத்தாட்டம் ரசிகர்களை கவர்ந்துள்ளது.
இவர்களுடன் நூற்றுக்கணக்கான நடன கலைஞர்களும் ஆடி உள்ளனர்.























