Header Logo
SLIC
வணிகம்
Evolution Auto - சம்பத் வங்கி இணைந்து மின்சார வாகனத்திற்கு மாறும் இலங்கைக்கு ஆதரவு

Aug 31, 2026 - 12:40 PM

Evolution Auto - சம்பத் வங்கி இணைந்து மின்சார வாகனத்திற்கு மாறும் இலங்கைக்கு ஆதரவு
Mobitel Inner 1278
EDEX Inner

Evolution Auto (Pvt) Ltd மற்றும் சம்பத் வங்கி ஆகியன இலங்கையில் மின்சார வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்காக ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் (MOU) கைச்சாத்திட்டுள்ளன. Evolution Auto நிறுவனத்தின் அதிகரித்து வரும் மின்சார வாகனத் தெரிவுகளை சம்பத் வங்கியின் நிதித் தீர்வுகளுடன் இணைத்து, வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகன உரிமையை மேலும் எளிதாக அணுகக்கூடியதாக மாற்றுவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது. 

பல்வேறு பயணத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் மின்சார வாகனங்களுடன் சேர்த்து, மின்சார வாகனங்களைப் பரிசீலிக்கும் வாடிக்கையாளர்களுக்கு பொருத்தமான நிதியளிப்பு தெரிவுகளை வழங்க இந்தக் கூட்டாண்மை உத்தேசித்துள்ளது. இலங்கையின் வணிக நிறுவனங்களுக்கும் நுகர்வோருக்கும் மிகவும் நிலைபேறான போக்குவரத்துக்கான மாற்றத்தை ஒரு நடைமுறைத் தெரிவாக மாற்றுவதை பொதுவான இலக்காகக் கொண்டு, நிதி மற்றும் வாகனத் துறைகளைச் சேர்ந்த இரு முன்னணி நிறுவனங்களை இது ஒன்றிணைக்கிறது. 

மின்சார வாகனம் தொடர்பில் அக்கறை கொண்டுள்ள வாடிக்கையாளர்கள், தமக்கு ஏற்ற சரியான வாகனத்தை பெறுவது எனும் முடிவானது அதில் ஒரு அங்கம் மாத்திரமே. இந்த மாற்றத்தை சாத்தியமாக்குவதில் நிதியளிப்பும் ஒரு முக்கிய பங்கை வகிக்கிறது. இந்தக் கூட்டாண்மையின் மூலம், Evolution Auto மற்றும் சம்பத் வங்கி ஆகியன வாடிக்கையாளர்களுக்கு மின்சார வாகன உரிமை மற்றும் அவற்றின் நிதியளிப்பு தெரிவுகளைப் பற்றி அறிந்துகொள்ள மிகவும் வசதியான முறையை வழங்க விரும்புகின்றன. 

இந்தக் கூட்டாண்மை குறித்து Evolution Auto (Pvt) Ltd நிறுவனத்தின் குழும பிரதம நிறைவேற்று அதிகாரி விரான் டி சொய்சா கருத்துத் தெரிவிக்கையில், "இலங்கையில் மின்சார வாகனப் பயன்பாட்டின் அடுத்த கட்டம் என்பது புதிய தொழில்நுட்பங்களை சந்தைக்கு அறிமுகப்படுத்துவது மாத்திரமல்ல. மாறாக நுகர்வோர் அந்தத் தொழில்நுட்பங்களைத் தெரிவு செய்வதையும் சொந்தமாக்கிக்கொள்வதையும் எளிதாக்குவதையும் உள்ளடக்கியதாகும். சம்பத் வங்கியுடனான எமது கூட்டாண்மையானது, வாடிக்கையாளர்களுக்கு பரந்த அளவிலான மின்சார வாகனங்களை வழங்குவதோடு, அவர்களின் வாகனக் கொள்வனவுக்கு ஆதரவாக, நடைமுறைக்கு ஏற்ற நிதியளிப்பு தெரிவுகளையும் ஏற்படுத்துவதன் மூலம் அந்தத் தேவையை இரு கோணங்களிலிருந்தும் பூர்த்தி செய்ய எமக்கு உதவுகிறது. எமது பார்வையில், இலங்கையின் தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் வணிகங்களுக்கு மின்சார வாகனப் பயன்பாட்டை மேலும் அணுகக்கூடியதாக மாற்றுவதற்கான ஒரு முக்கியமான படி இதுவாகும்." என்றார். 

AVATR, IM Motors, XPENG, Riddara, KYC ஆகியன Evolution Auto நிறுவனத்தின் அதிகரித்து வரும் மின்சார வாகன வகைகளில் அடங்குகின்ற, சர்வதேச ரீதியில் அங்கீகரிக்கப்பட்ட சில வர்த்தகநாமங்களாகும். உயர் ரக பயணிகள் வாகனங்கள் முதல் வணிக மற்றும் பயன்பாட்டு தேவைகள் சார்ந்த வாகன தீர்வுகள் வரை பல்வேறு தெரிவுகளை உள்ளடக்கியுள்ளதன் மூலம், தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் பல்வேறு தேவைகளைப் பூர்த்தி செய்ய நிறுவனத்தால் முடிகிறது. 

வாகன உரிமை, செயற்பாட்டுச் செலவுகள் மற்றும் சூழல் தாக்கம் ஆகியவற்றின் நீண்டகால விளைவுகளை வணிக நிறுவனங்களும் நுகர்வோரும் கணக்கில் எடுத்துக்கொள்வதால், இலங்கையில் மின்சார வாகனங்கள் மீதான ஆர்வம் அதிகரித்து வரும் சூழலில் இந்தக் கூட்டாண்மை அமைந்துள்ளது. வாகனத் தீர்வுகளை நிதி நிபுணத்துவத்துடன் இணைப்பதன் மூலம் மின்சார வாகனப் பயன்பாட்டை நோக்கிய முன்னேற்றத்துடன் தொடர்புடைய நடைமுறை பரிசீலனைகளில் ஒன்றான பொருத்தமான நிதியளிப்பு வசதிக்குத் தீர்வு காண்பதை இந்தக் கூட்டணி நோக்கமாகக் கொண்டுள்ளது. 

தமது அடுத்த வாகனத்தைக் கருத்தில் கொள்ளும் தொழில்முறை வல்லுநர்கள், குடும்பங்கள் மற்றும் சூழல் விழிப்புணர்வுள்ள நுகர்வோருக்கு, இந்த கூட்டாண்மையானது வாகனத் தெரிவு மற்றும் நிதியளிப்பு ஆகிய இரண்டையும் ஒரே இடத்தில் பெறுவதற்கான வாய்ப்பை உருவாக்குகிறது. அத்துடன், வாகன தொகுதிகளை பேணுவோர் மற்றும் வணிக பயன்பாடுகளுக்காக மின்சார வாகனங்களை பயன்படுத்த எண்ணும் வணிக நிறுவனங்களுக்கு, தமது செயற்பாடுகளுக்கான மின்சார மாற்று வழிகளை மதிப்பிடுவதற்கு இது ஒரு பரந்த வழியை வழங்குகிறது. 

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இலங்கையின் போக்குவரத்து துறையில் ஏற்படும் ஒரு பாரிய மாற்றத்தின் பிரதிபலிப்பாகும், ஏனெனில் நாடு மின்சாரமயமாக்கலை நோக்கி நகரும் வேளையில் பல்வேறு துறைகளுக்கு இடையிலான ஒத்துழைப்பு மிகவும் முக்கியமானதாகும். Evolution Auto மற்றும் சம்பத் வங்கி ஆகிய இரண்டு நிறுவனங்களும் வாகனத் தீர்வுகளை நிதி அணுகலுடன் இணைப்பதன் மூலம், மின்சார வாகனத்திற்கான உரிமையானது ஒரு சிலருக்கு மாத்திரமான தெரிவு எனும் எண்ணக்கருவை மாற்றி, மிகவும் நடைமுறைக்கு ஏற்ற போக்குவரத்து தெரிவாக மாற்ற முயற்சிக்கின்றன. 

தூய்மையான மற்றும் புத்திசாலித்தனமான போக்குவரத்தை நோக்கி இலங்கை நகரும் வேளையில், இந்தக் கூட்டாண்மையானது ஒரு எளிய முன்மொழிவை சாத்தியமாக்குகிறது. மின்சார வாகனத்திற்கு மாறுவது என்பது இலங்கை நுகர்வோருக்கான யதார்த்தமான தீர்வாகும் என்பதில் ஐயமில்லை. 

இது தொடர்பான மேலதிக தகவல்களுக்கு, www.evolutionauto.lk அல்லது 0777 553 355 இலக்கத்தை தொடர்பு கொள்ளவும்.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278