Header Logo
SLIC
செய்திகள்
பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை

Aug 31, 2026 - 06:43 PM

 பாரிய சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் முற்றுகை
Mobitel Inner 1278
EDEX Inner

குளியாப்பிட்டிய பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கீழ் தியதொர, மாதரவத்த பிரதேசத்தில் பாரிய அளவில் முன்னெடுக்கப்பட்டு வந்த சட்டவிரோத மதுபான உற்பத்தி நிலையம் ஒன்றை வலான ஊழல் தடுப்புப் பிரிவினர் முற்றுகையிட்டுச் சந்தேகநபர் ஒருவரைக் கைது செய்துள்ளனர்.

வலான ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரிக்குக் கிடைத்த தகவலுக்கு அமைய, அதன் பணிப்பாளர் உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரோஹண ஓலுகலவின் உத்தரவு மற்றும் வழிகாட்டலுக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட இரகசிய விசாரணையைத் தொடர்ந்து, இன்று (31) விசேட பொலிஸ் குழுவினால் இந்த முற்றுகை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இந்த முற்றுகையின் போது, சட்டவிரோத மதுபான காய்ச்சுவதற்குப் பயன்படுத்தப்படும் 7,560,000 மில்லி லீற்றர் கோடா அடங்கிய 40 பீப்பாய்கள், 187,500 மில்லி லீற்றர் கசிப்பு அடங்கிய 250 போத்தல்கள், 07 சுருள்களைக் கொண்ட 02 செப்புச் சுருள்கள், 02 எரிவாயு அடுப்புகள் மற்றும் 12.5 கிலோகிராம் கொண்ட 04 எரிவாயு சிலிண்டர்கள் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காகக் குளியாப்பிட்டிய பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட இந்த கோடாவை காய்ச்சி உற்பத்தி செய்யப்படும் சட்டவிரோத மதுபானத்தைப் பிரதேசம் முழுவதும் விநியோகிக்கத் திட்டமிட்டிருந்தமை மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278