Header Logo
SLIC
செய்திகள்
ரஜரட்டயில் கடுமையான வறட்சி - 778 குளங்கள் முற்றாக வற்றின

Aug 31, 2026 - 07:58 PM

ரஜரட்டயில் கடுமையான வறட்சி - 778 குளங்கள் முற்றாக வற்றின
Mobitel Inner 1278
EDEX Inner

ஒவ்வொரு ஆண்டும் ஜூலை முதல் ஒக்டோபர் வரையிலான காலப்பகுதியில் ரஜரட்ட பிராந்தியத்தில் வறட்சி நிலவுவது இயல்பான நிலை என்ற போதிலும், இம்முறை நிலவும் கடுமையான வறண்ட வானிலை காரணமாக அப்பகுதியின் நீர் நிலைகள் வேகமாக வற்றி வருவதாக அனுராதபுரம் மாவட்ட செயலாளர் ரஞ்சித் விமலசூரிய தெரிவித்துள்ளார்.

இன்று (31) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த அவர், கடந்த ஆண்டுகளை விடவும் தீவிரமடைந்து வரும் இந்த வறட்சி காரணமாக ரஜரட்ட மக்களின் இயல்பு வாழ்க்கைக்கும், சுற்றாடல் மற்றும் வனவிலங்குகளுக்கும் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டார்.

மாவட்டத்தில் உள்ள 2,410 சிறிய நீர்ப்பாசனக் குளங்களில் 788 குளங்களின் நீர் முற்றாக வற்றியுள்ளதாகவும், மேலும் 612 குளங்களின் நீர் மட்டம் 5 சதவீதத்திற்கும் குறைவாகக் குறைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதேவேளை, மொத்த நீர் கொள்ளளவில் 75 சதவீதத்திற்கும் அதிகமான நீர் 7 பிரதான குளங்களில் மட்டுமே எஞ்சியுள்ளதாக அவர் மேலும் கூறினார்.

நீர் நிலைகள் இவ்வாறு கடுமையாக வற்றி வருவதன் காரணமாகக் குடிநீரைப் பெற்றுக்கொள்வதில் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன், விவசாய நடவடிக்கைகளுக்கும் வனவிலங்குகளின் நீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கும் கடும் தடைகள் ஏற்பட்டுள்ளன.

MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278