Sep 1, 2026 - 09:47 AM

வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்த மகோற்சவம் வெகுவிமரிசையாக நடைபெற்று வரும் நிலையில், நேற்று (31) 15 ஆம் திருவிழாவான வெள்ளிக்கிடாய் சக கிடாய் வாகன உற்சவம் சிறப்பாக இடம்பெற்றது.
இதன்போது, வள்ளி தெய்வானை சமேத வேல் பெருமான் கிடாய் வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி வழங்கினார்.
அதனைத் தொடர்ந்து, சுவாமி வெளிவீதியுலா இடம்பெற்றதுடன், பெருமளவான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்து அருளாசி பெற்றனர்.



























