Header Logo
SLIC
சினிமா
பிக் பாஸ் 10 ஆவது சீசனில் 21 போட்டியாளர்கள்?

Sep 1, 2026 - 05:19 PM

பிக் பாஸ் 10 ஆவது சீசனில் 21 போட்டியாளர்கள்?
Mobitel Inner 1278
EDEX Inner

பிக்பாஸ் தமிழ் நிகழ்ச்சிக்கு என தனி ரசிகர்கள் பட்டாளமே உண்டு. பலரும் அடுத்த சீசன் எப்போது தொடங்கும் என ஆவலுடன் எதிர்நோக்கி உள்ளனர். அந்த வகையில் பிக்பாஸ் 10 ஆவது சீசன் வரும் செப்டம்பர் 6 ஆம் திகதி அன்று தொடங்க இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

 

தொடக்கத்தில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய இந்த நிகழ்ச்சியை சில சீசன்களாக விஜய் சேதுபதி தொகுத்து வழங்கி வருகிறார். அவரே இந்த சீசனையும் தொகுத்து வழங்க இருக்கிறார். 

10 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி பிக்பாஸ் குழுவினர் சில புதிய முயற்சிகளை மேற்கொண்டுள்ளனர். அதன்படி, ‘பிக்பாஸ் காமன் மேன்’ என்று புதிய நிகழ்ச்சி ஒளிபரப்பாகி வருகிறது. அதாவது தொடர்ந்து பிக்பாஸ் பார்த்து வரும் ரசிகர்களை ‘பிக்பாஸ்’ வீட்டுக்குள் அனுப்ப திட்டமிட்டுள்ளனர். அந்த வகையில், காமன்மேன் நிகழ்ச்சியில் பங்கேற்கும் 3 பேர் பிக்பாஸ் வீட்டுக்குள் அனுப்பப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பிக்பாஸ் தொடங்குவதற்கு முன்பே அதில் யார்? பங்கேற்க போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே இயல்பாகவே எழுந்துள்ளது. அதன்படி, இந்த முறை பங்கேற்கும் 21 பேரின் பெயர்கள் சமூக வலைதளங்களில் பரவி வருகின்றன. 21 பேரில் பெரும்பாலும் விஜய் டிவியில் பணிபுரிபவர்களே அதிகம். அவர்கள் யார் யார் தெரியுமா? 

இந்திய அணிக்காகவும், தமிழ்நாடு அணிக்காகவும், ஐபிஎல் போட்டியில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் விளையாடிய முரளி விஜய் இந்த முறை பிக் பாஸ் போட்டியாளராக களமிறங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் தவிர எதிர்பார்ப்புக்குரிய மற்றொரு முக்கிய போட்டியாளரும் பங்கேற்க உள்ளார். 

அவர் தான் ஜாய் கிரிசில்டா. மாதம்பட்டி ரங்கராஜ் உடனான மோதலுக்கு பிறகு மீண்டும் அவருடன் இணைந்திருக்கிறார் கிரிசில்டா. இந்த நிலையில் தான் அவருக்கு பிக்பாஸ் வாய்ப்பு வந்திருக்கிறது. அவரும் 21 போட்டியாளர்களில் ஒருவராக பங்கேற்க இருப்பதாக சொல்லப்படுகிறது. 

கடந்த சீசனில் இடம்பெற்றிருந்த நடிகர் ரஞ்சித்தின் மனைவி பிரியா ராமனும் இம்முறை பிக் பாஸில் பங்கேற்க இருப்பதாக தகவல். சினிமா விமர்சகர் பிரசாந்த், விஜய் டிவியின் செல்லப்பிள்ளை குரேஷி, சீரியல் நடிகர் வினோத் பாபு போன்றோரும் பங்கேற்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

இவர்கள் தவிர, விஜய் டிவியில் பணியாற்றும் நடிகை ஜனனி அசோக், விஜய் டிவியின் ஜோடி ஆர் யூ ரெடி, குக் வித் கோமாளி மற்றும் ஸ்டார்ட் மியூசிக் ஷோக்கள் மூலமாக பிரபலமான டாலி, பாக்கியலட்சுமி சீரியல் நடிகர் ஆர்யன், சீரியல் நடிகர்கள் புவியரசு, நவீன், வினோத் பாபு ஆகியோரும் பங்கேற்க இருப்பதாக தகவல். 

மேலும், டான்ஸ் மாஸ்டர் சாண்டியின் உறவினர் சிந்தியா வினோலின், சீரியல் நடிகைகள் அக்ஷிதா அசோக், ஃபரினா, ஹேமா ராஜ்குமார், பானுமதி, காயூ ஸ்ரீ, மேக்அப் ஆர்ட்டிஸ்ட் ஸ்வப்னா ஆகியோரும் பிக் பாஸ் 10 ஆவது சீசனில் இடம்பெற உள்ளனர். 

அதேபோல், காமன்மேன் நிகழ்ச்சியில் பங்கேற்ற கரிஷ்மா, முனியம்மா, ஜேசன் கௌஷி ஆகிய மூவரும் இந்த சீசனில் இடம்பெறக் கூடும் எனத் தகவல் வெளியாகியுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

இந்த அரசாங்கத்தை மக்கள் பெரிதும் நம்புகின்றார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

பாடசாலைக்குச் செல்லாதவர்கள் கூட அமைச்சரவையில் இருக்கிறார்கள்!

Mobitel 1278