Sep 2, 2026 - 11:52 AM

தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக 'தினன தகுன' அமைப்பினால் இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது பாராளுமன்ற உறுப்பினர் பதவிக்குரிய சலுகைக் கொடுப்பனவுகளை, அவை வழங்கப்பட்டதன் நோக்கமான பொது நலனுக்காகப் பயன்படுத்தாமல், மக்கள் விடுதலை முன்னணியின் வங்கி கணக்கில் வைப்பு செய்வதன் மூலம் 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் குற்றம் ஒன்றைப் புரிந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் 2023 ஆம் ஆண்டின் 09 ஆம் இலக்க ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் விரைவான விசாரணை ஒன்றை முன்னெடுக்குமாறு கோரி 'தினன தகுன' அமைப்பு இன்று (02) இலஞ்சம் அல்லது ஊழல் பற்றிய சார்த்துதல்களைப் புலனாய்வு செய்வதற்கான ஆணைக்குழுவில் முறைப்பாட்டைச் சமர்ப்பித்துள்ளது.
தேசிய மக்கள் சக்தியின் 159 பாராளுமன்ற உறுப்பினர்களையும் அழைத்து வாக்குமூலங்களைப் பதிவுசெய்து விசாரணைகளை நடத்துமாறும், கட்சியின் வங்கி கணக்குகளைப் பரிசீலிக்குமாறும் 5 கோரிக்கைகளின் கீழ் அவர்கள் இந்த முறைப்பாட்டை முன்வைத்துள்ளனர்.



























