Header Logo
SLIC
வணிகம்
Ather Overtone தொடரை Evolution Auto நிறுவனம் இலங்கைச் சந்தையில் அறிமுகப்படுத்துகிறது Cruise Control, Magic Twist மற்றும் மூன்று புதிய வண்ணங்களுடன் அறி

Sep 2, 2026 - 12:36 PM

Ather Overtone தொடரை Evolution Auto நிறுவனம் இலங்கைச் சந்தையில் அறிமுகப்படுத்துகிறது Cruise Control, Magic Twist மற்றும் மூன்று புதிய வண்ணங்களுடன் அறி
Mobitel Inner 1278
EDEX Inner

Ather Overtone தொடரை Evolution Auto Pvt Ltd நிறுவனம் இலங்கைச் சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் இலங்கை வாடிக்கையாளர்களுக்கு நவீன தொழில்நுட்பம், சிறந்த செயல்திறன் மற்றும் பிரீமியம் வடிவமைப்புடன் கூடிய புதிய தலைமுறை மின்சார ஸ்கூட்டர் அனுபவத்தை வழங்குவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. 

Ather Overtone ஆனது Cruise Control மற்றும் Magic Twist உள்ளிட்ட மேம்பட்ட தொழில்நுட்ப அம்சங்களுடன் அறிமுகமாகியுள்ளது. மேலும், Space Grey, Lunar Grey மற்றும் Still White ஆகிய மூன்று தனித்துவமான வண்ணங்களில் இது கிடைக்கிறது. 

செயல்திறனில் எந்தவித சமரசமும் இன்றி சிறந்த பயண அனுபவத்தை விரும்பும் வாடிக்கையாளர்களுக்காக Ather Overtone வடிவமைக்கப்பட்டுள்ளது. இது மணிக்கு 90 கி.மீ. வரையிலான அதிகபட்ச வேகத்தை வழங்குவதுடன், 161 கி.மீ. IDC ரேஞ்சையும் வழங்குகிறது. மேலும், 10 நிமிட ஃபாஸ்ட் சார்ஜிங் மூலம் 30 கி.மீ. வரை பயணிக்கக்கூடிய திறனையும் கொண்டுள்ளது. இதில் இடம்பெற்றுள்ள Cruise Control வசதி, நீண்ட தூரப் பயணங்களின்போது நிலையான வேகத்தைப் பராமரிக்க உதவுவதன் மூலம் பயணத்தை மேலும் வசதியாக்குகிறது. அதேவேளை, Magic Twist தொழில்நுட்பமானது Throttle கட்டுப்பாட்டின் மூலம் வேகத்தைக் குறைப்பதற்கும் மீளுருவாக்க பிரேக்கிங் (Regenerative Braking) அனுபவத்தை மேம்படுத்துவதற்கும் உதவுகிறது. இந்த மேம்பட்ட அம்சங்கள் இலங்கையின் வளர்ந்து வரும் மின்சார வாகனச் சந்தையில் Ather தயாரிப்பு வரிசையின் அடுத்தகட்ட முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகின்றன. 

Ather Overtone, Ather நிறுவனத்தின் எளிமையானதும் நேர்த்தியானதுமான வடிவமைப்பைத் தொடர்ந்து பேணுவதுடன், வாடிக்கையாளர்கள் தங்களது தனித்துவமான பாணியை வெளிப்படுத்தும் வகையில் மூன்று புதிய வண்ணத் தெரிவுகளையும் வழங்குகிறது. Space Grey, Lunar Grey மற்றும் Still White ஆகிய வண்ணங்கள் நவீன நகர்ப்புற வாழ்க்கை முறைக்கு ஏற்ற பிரீமியம் தோற்றத்தை வழங்குகின்றன. 

முற்பதிவுகள் தற்போது ஆரம்பம் 

Ather Overtoneக்கான முற்பதிவுகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன. ஆர்வமுள்ள வாடிக்கையாளர்கள் 0777 55 33 55 என்ற தொலைபேசி இலக்கத்தினூடாக Evolution Auto நிறுவனத்தைத் தொடர்புகொண்டு மேலதிக தகவல்களைப் பெற்றுக்கொள்வதுடன், தங்களது புதிய Ather Overtone ஸ்கூட்டருக்கான முற்பதிவையும் மேற்கொள்ள முடியும். 

இப்புதிய அறிமுகம் தொடர்பாக Evolution Auto Pvt Ltd நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சஹ்ரான் ஜியாவுதீன் அவர்கள் கருத்துத் தெரிவிக்கையில்: 

“புத்தாக்கம் என்பது தொடர்ச்சியாக எல்லைகளைக் கடந்து, சாத்தியமானவற்றை மறுவரையறை செய்ய வேண்டும் என்ற நம்பிக்கையின் அடிப்படையில் கட்டியெழுப்பப்பட்ட ஒரு எழுச்சியூட்டும் வர்த்தகநாமமாகவே Ather எப்போதும் திகழ்ந்து வருகிறது. எமது புதிய தயாரிப்புத் தொடரின் அறிமுகத்தின் மூலம், அந்தத் தத்துவத்தை நாம் மேலும் ஒரு உயர்ந்த நிலைக்குக் கொண்டு செல்கிறோம். அனைவரின் கவனத்தையும் ஈர்க்கும் வகையில் நேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய வண்ணத் தெரிவுகளுடன், பாரம்பரியமாக சொகுசு கார்களுடன் தொடர்புபடுத்தப்படும் தொழில்நுட்ப அனுபவத்தை வழங்கும் Cruise Control மற்றும் Magic Twist போன்ற மேம்பட்ட அம்சங்களும் எமது வாடிக்கையாளர்களின் பயண அனுபவத்திற்கு புதியதொரு அளவிலான வசதியையும் நவீனத்தன்மையையும் சேர்க்கின்றன. 

இது வெறுமனே ஒரு புதிய தயாரிப்பு அறிமுகம் அல்ல. இந்தத் தயாரிப்புத் தொடரானது உயர்தர நகர்வுத்திறனுக்கான (Premium Mobility) Ather நிறுவனத்தின் அர்ப்பணிப்பை பிரதிபலிக்கிறது. அதன் தனித்துவமான வடிவமைப்பு, தொலைநோக்குடன் உருவாக்கப்பட்ட தொழில்நுட்பம் மற்றும் ஒவ்வொரு பயணத்தையும் மேம்படுத்தும் நுணுக்கமான அம்சங்கள் மீதான சமரசமற்ற கவனம் ஆகியவற்றின் மூலம் இது வெளிப்படுத்தப்படுகிறது. 

ஒவ்வொரு Ather வாகனமும் வெறும் மின்சார இருசக்கர வாகனமாக மட்டுமன்றி, வாடிக்கையாளர்கள் பெருமையுடன் சொந்தமாக்கிக் கொள்ள விரும்பும் ஒரு உண்மையான பிரீமியம் தயாரிப்பாகத் திகழ வேண்டும் என்பதே எமது நோக்கமாகும்.” 

Evolution Auto Pvt Ltd நிறுவனம் இலங்கையில் Ather Energy மின்சார ஸ்கூட்டர்களின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தராகச் செயற்படுகிறது. புதிய ஆற்றல் வாகனங்கள் (New Energy Vehicles) துறையில் செயல்பட்டு வரும் Evolution Auto, சர்வதேச மின்சார வாகன உற்பத்தியாளர்களுடன் இணைந்து, அவர்களின் தயாரிப்புகளை இலங்கைச் சந்தைக்கு அறிமுகப்படுத்துவதுடன், வாடிக்கையாளர்களுக்கு சிறந்த விற்பனை மற்றும் விற்பனைக்குப் பிந்தைய சேவை அனுபவத்தையும் வழங்குவதில் கவனம் செலுத்துகிறது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

ஓ.எம்.பி.யின் ஏமாற்று நாடகம் இனியும் வேண்டாம்!

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

தெல்லிப்பழை ஸ்ரீ துர்க்காதேவி தேவஸ்தான ஆலயத்தின் இரதோற்சவம்

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

20 வீதமாகக் குறைந்த இரணைமடு நீர்மட்டம்!

Mobitel 1278