Header Logo
SLIC
வணிகம்
ஜனசக்தி பைனான்ஸ், 45 ஆண்டுகால நம்பகமான சேவை, உறுதிப்பாடு மற்றும் நிதி நிபுணத்துவம் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது

Sep 4, 2026 - 12:00 PM

ஜனசக்தி பைனான்ஸ், 45 ஆண்டுகால நம்பகமான சேவை, உறுதிப்பாடு மற்றும் நிதி நிபுணத்துவம் ஆகியவற்றைக் கொண்டாடுகிறது
Mobitel Inner 1278
EDEX Inner

JXG (ஜனசக்தி குழுமம்) நிறுவனத்தின் துணை நிறுவனமான ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி, தனது 45ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுகிறது. ஜனசக்தி பைனான்ஸ், நிதிசார் நிபுணத்துவம், வாடிக்கையாளர்களின் நம்பிக்கை மற்றும் இலங்கையின் வங்கிசாரா நிதி நிறுவனத் (NBFI) துறைக்கு வழங்கிய அர்த்தமிக்க பங்களிப்புகளை நினைவுகூர்ந்து, நான்கரை தசாப்தங்களைக் கடந்த தனது வெற்றிகரமான பயணத்தைக் கொண்டாடுகிறது. இந்த மைல்கல் ஆனது, உறுதியான உறவுகள், வலுவான நிறுவன ஆளுகை மற்றும் தனிநபர்களையும் தொழில்முயற்சியாளர்களையும் வலுவூட்டும் புதுமையான நிதித் தீர்வுகளை வழங்குவதற்கான அதன் அர்ப்பணிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் நம்பகமான நிதிப்பங்காளராக நிறுவனம் தொடர்ந்து வளர்ச்சியடைந்துள்ளதை பிரதிபலிக்கிறது. 

1981ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஜனசக்தி பைனான்ஸ், இலங்கையின் நீண்டகால பாரம்பரியமிக்க உரிமம் பெற்ற நிதி நிறுவனங்களில் ஒன்றாக வளர்ச்சியடைந்துள்ளது. வாடிக்கையாளர்களை மையப்படுத்திய சேவை அணுகுமுறை, ஒழுங்குமுறை செயல்பாடுகள் மற்றும் சந்தையின் மாறிவரும் தேவைகளுக்கு ஏற்ப தன்னை மாற்றிக்கொள்ளும் திறன் ஆகியவற்றின் மூலம் நிறுவனம் தனித்துவமான அங்கீகாரத்தைப் பெற்றுள்ளது. அதன் தாய் நிறுவனமான JXG (ஜனசக்தி குழுமம்) வழங்கும் வலுவான ஆதரவுடன், நாடெங்கிலும் தனிநபர்கள், தொழில்முயற்சியாளர்கள், நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகள் (MSMEs) மற்றும் சமூகங்களுக்கான நிதிச்சேவைகளை விரிவுபடுத்தி வருகிறது. 

கடந்த 45 ஆண்டுகளாக, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிப் பயணத்துடன் இணைந்து பயணித்து வரும் ஜனசக்தி பைனான்ஸ், மாறிவரும் நிதித்தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் தனது தயாரிப்புகள், சேவைகள் மற்றும் வாடிக்கையாளர் அனுபவங்களை தொடர்ந்து மேம்படுத்தி வந்துள்ளது. அதன் பரந்த நிதித்தீர்வுகள், நாடளாவிய சேவை விரிவாக்கம் மற்றும் உறவுகளை மையப்படுத்திய சேவை அணுகுமுறை ஆகியவற்றின் ஊடாக ஆயிரக்கணக்கான இலங்கையர்கள் தமது தனிப்பட்ட இலக்குகளை அடையவும், தொழில்களை முன்னேற்றகரமான பாதையில் கொண்டு செல்லவும், புதிய வாய்ப்புகளை உருவாக்கிக்கொள்ளவும் நிறுவனம் உறுதுணையாக இருந்து வருகிறது. 

நம்பிக்கை, விசேடத்துவமான சேவை மற்றும் வாடிக்கையாளர்களின் தேவைகளை ஆழமாகப் புரிந்துகொள்ளும் திறன் ஆகியவற்றின் ஊடாக நீடித்த உறவுகளை உருவாக்கியிருப்பது ஜனசக்தி பைனான்ஸின் வளர்ச்சிப் பயணத்தின் முக்கிய பலங்களில் ஒன்றாக திகழ்கின்றது. 2025ஆம் ஆண்டு ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சியிலிருந்து ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி ஆக மறுபெயர் சூட்டப்பட்டமையைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வர்த்தகநாம ஆய்வுகளில், வாடிக்கையாளர்களிடையே அதிகரித்த நேர்மறையான எண்ணப்பாங்கு, உயர்ந்த வாடிக்கையாளர் திருப்தி நிலைகள் மற்றும் வலுவான Net Promoter Score (NPS) பெறுபேறுகள் பதிவாகியுள்ளன. இவை, நிறுவனத்தின் மீது வாடிக்கையாளர்கள் கொண்டுள்ள உறுதியான நம்பிக்கையையும், அர்த்தமிக்க நிதி அனுபவங்களை வழங்கும் அதன் திறனையும் மேலும் உறுதிப்படுத்துகின்றன. 

துறைசார் சிறப்பை நோக்கிய ஜனசக்தி பைனான்ஸின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பு, கடந்த ஆண்டுகளில் நிறுவனம் பெற்ற பல்வேறு விருதுகள் மற்றும் கௌரவிப்புகளின் ஊடாகவும் வெளிப்படுகின்றது. 2024 மற்றும் 2025ஆம் ஆண்டுகளுக்கான CA Sri Lanka TAGS விருதுகள், 2024ஆம் ஆண்டுக்கான IFFSA விருதுகள், 2025ஆம் ஆண்டுக்கான 10ஆவது International Islamic Finance Forum South Asia (IFFSA) விருதுகள், 2024ஆம் ஆண்டுக்கான SLIBFI விருதுகள், 11ஆவது CMA Excellence in Integrated Reporting விருதுகள், 2025ஆம் ஆண்டுக்கான SLIM DIGIS 2.5 விருதுகள், 2025ஆம் ஆண்டுக்கான Effie விருதுகள் ஸ்ரீ லங்கா மற்றும் 2025ஆம் ஆண்டுக்கான Best Management Practices Company விருதுகள் ஆகியவற்றில் ஜனசக்தி பைனான்ஸ் கௌரவிக்கப்பட்டுள்ளது. இந்த அங்கீகாரங்கள், நிறுவன ஆளுகை, ஒருங்கிணைந்த அறிக்கையிடல், சந்தைப்படுத்தல் செயல்திறன், டிஜிட்டல் ஈடுபாடு, நிதிசார் உள்ளடக்கம் மற்றும் பொறுப்பான வணிக நடைமுறைகள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஜனசக்தி பைனான்ஸ் பதிவு செய்துள்ள முன்னேற்றத்தை எடுத்துக்காட்டுகின்றன. 

இம் மைல்கல் குறித்து கருத்து தெரிவித்த, ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சியின் தலைவர் ராஜேந்திர தியாகராஜா, 45 ஆண்டுகால பயணத்தை நிறைவு செய்வது எமக்கு பெருமைக்குரிய மைல்கல்லாகும். இது எமது நிறுவனத்தின் வலிமையையும், எமது பங்குதாரர்கள் எம்மீது வைத்துள்ள நம்பிக்கையையும், மாறிவரும் பொருளாதார சூழலிலும் தொடர்ச்சியாக மதிப்பை உருவாக்க்கக் கூடிய எமது திறனையும் வெளிப்படுத்துகிறது. கடந்த பல ஆண்டுகளாக, வாடிக்கையாளர்களை எமது அனைத்து தீர்மானங்களிலும் மையமாகக் கொண்டு, உயர் நிறுவன ஆளுமைத் தரநிலைகள், நிதி ஒழுக்கம் மற்றும் பொறுப்பான வளர்ச்சி ஆகியவற்றை உறுதியாகப் பேணியதன் மூலம் எமது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளோம். இலங்கை புதிய பொருளாதார வாய்ப்புகளை நோக்கி முன்னேறி வரும் இக் காலகட்டத்தில், தனிநபர்கள், தொழில்முயற்சியாளர்கள் மற்றும் வணிக நிறுவனங்களின் வளர்ச்சிக்கு துணைநிற்கும் வகையில், அணுக எளிதானதும், அவர்களின் தேவைகளுக்கு ஏற்றதுமான நிதித்தீர்வுகளை வழங்குவதன் மூலம் நாட்டின் பொருளாதார முன்னேற்றத்திற்கு தொடர்ந்தும் பங்களிக்க நாம் உறுதிபூண்டுள்ளோம். என்றார். 

நிறுவனத்தின் எதிர்காலக் கண்ணோட்டம் தொடர்பாக எடுத்துரைத்த ஜனசக்தி பைனான்ஸ் நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி சிதம்பரம் ஸ்ரீ கணேந்திரன், எமது 45 ஆண்டுகால பயணம், தலைமுறைகள் கடந்தும் வாடிக்கையாளர்களுடனும் ஏனைய பங்குதாரர்களுடனும் நாம் கட்டியெழுப்பியுள்ள நம்பிக்கையின் பிரதிபலிப்பாகும். வாடிக்கையாளர்களின் மாறிவரும் தேவைகளைப் புரிந்துகொண்டு, உயர்தர சேவையையும் அர்த்தமிக்க தாக்கத்தை ஏற்படுத்தும் நிதித்தீர்வுகளையும் தொடர்ந்து வழங்கியதன் மூலமே இப் பயணம் சாத்தியமாகியுள்ளது. எமது வாடிக்கையாளர்களுடனான உறவுகளிலும், அண்மையில் மேற்கொள்ளப்பட்ட பெயர் மாற்றம் மற்றும் வாடிக்கையாளர் ஆய்வுகளிலும் வெளிப்பட்டுள்ள நம்பிக்கையானது, ஜனசக்தி பைனான்ஸின் வலிமையை மேலும் உறுதிப்படுத்துகிறது. எதிர்காலத்தை நோக்கி பயணிக்கும் நாம், எமது திறன்களை மேலும் வலுப்படுத்தி, டிஜிட்டல் மாற்றத்தை விரைவுபடுத்தி, புத்தாக்கங்களைத் தழுவி, வாடிக்கையாளர் அனுபவத்தை மேலும் மேம்படுத்துவதுடன், இலங்கை முழுவதும் உள்ள தனிநபர்களுக்கும் வணிக நிறுவனங்களுக்கும் அதிக வாய்ப்புகளை உருவாக்கும் தனித்துவமான நிதித்தீர்வுகளை தொடர்ந்து வழங்குவோம். என்றார். 

ஜனசக்தி பைனான்ஸ், தனிநபர்கள், தொழில்முனைவோர், நுண், சிறிய மற்றும் நடுத்தர நிறுவனங்கள் (MSMEs) மற்றும் போதுமான நிதிச் சேவைகள் கிடைக்கப்பெறாத தரப்பினருக்கு எளிதில் அணுகக்கூடிய நிதித்தீர்வுகளை வழங்குவதன் மூலம், நிதி உள்ளடக்கத்தை மேம்படுத்துவதில் தொடர்ந்து உறுதியாக உள்ளது. தொழில் வளர்ச்சிக்கு ஆதரவளித்தல், வாழ்வாதாரங்களை மேம்படுத்துதல் மற்றும் நிதி முன்னேற்றத்தை எளிதாக்குதல் ஆகியவற்றின் ஊடாக இந்நிறுவனம் சமூகங்களையும் இலங்கைப் பொருளாதாரத்தையும் வலுப்படுத்துவதற்குத் தொடர்ந்து பங்களித்து வருகிறது. 

ஜனசக்தி பைனான்ஸ் தனது வளர்ச்சியின் அடுத்த கட்டத்திற்குள் நுழையும் வேளையில், “தனித்துவமான நிதித் தீர்வுகளை வழங்கும் முன்னணி நிறுவனமாகத் திகழ்வது” என்ற தனது தொலைநோக்குப் பார்வையால் தொடர்ந்து வழிநடத்தப்படுகிறது. கடந்த 45 ஆண்டுகளாக கட்டியெழுப்பிய நம்பிக்கை, உறுதிப்பாடு மற்றும் நிதிசார் நிபுணத்துவத்தை அடித்தளமாகக் கொண்டு, புத்தாக்கம், சேவைச் சிறப்புமிக்க தரநிலைகள் மற்றும் இலங்கையர்களின் எதிர்கால இலட்சியங்களை தலைமுறை தலைமுறையாக ஆதரிக்கும் அர்த்தமிக்க நிதி அனுபவங்களை உருவாக்குவதில் நிறுவனம் தொடர்ந்தும் கவனம் செலுத்தும். 

ஜனசக்தி பைனான்ஸ் பற்றி (முன்னர் ஒரியன்ட் பைனான்ஸ் பிஎல்சி என அறியப்பட்டது) 

ஜனசக்தி பைனான்ஸ் வாடிக்கையாளர்களின் தேவைகளை நிவர்த்தி செய்யக்கூடிய பரந்தளவு நிதிச்சேவைகளை வழங்குகிறது. அதில், வைப்புகள், சேமிப்புக் கணக்குகள், லீசிங், தங்கக் கடன்கள், மாற்று நிதித்தீர்வுகள், கூட்டாண்மை நிதிவசதியளிப்புகள் மற்றும் பல சேவைகள் அடங்கியுள்ளன. நிறுவனம் 45 வருட கால உறுதித்தன்மை, வலிமை, நம்பகத்தன்மை மற்றும் நிபுணத்துவம் ஆகியவற்றை நிதித்துறையில் கொண்டுள்ளது. வாடிக்கையாளரை நோக்காகக் கொண்ட நிதிச்சேவைகள் வழங்குனராக ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி தன்னை நிலைநிறுத்தியுள்ளதுடன், புத்தாக்கத்துக்கு முக்கியத்துவமளித்து, சிறந்த தீர்வுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவையை வழங்குகிறது. ஜனசக்தி பைனான்ஸ் ஒரு JXG (ஜனசக்தி குழும கம்பனி) என்பதுடன், இலங்கை மத்திய வங்கியின் அனுமதி மற்றும் LRA இடமிருந்து BB+ (Positive Outlook) தரப்படுத்தலை பெற்றுக் கொண்டுள்ள நிறுவனமாகும். 

ஜனசக்தி பைனான்ஸ் பிஎல்சி - https://www.janashakthifinance.lk/

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய  விளக்கம்!

பதவி விலகிய NPP உறுப்பினர் வழங்கிய விளக்கம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

சிங்கம் சக மகர வாகன உற்சவம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

மன்னாரில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் போராட்டம்!

நாக வாகன உற்சவம்!

நாக வாகன உற்சவம்!

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

செல்வச்சந்நிதி முருகன் ஆலயத் தேர் திருவிழா

புனித மீலாதுன் நபி தினம்!

புனித மீலாதுன் நபி தினம்!

மனம் திறந்த அமைச்சர்!

மனம் திறந்த அமைச்சர்!

Mobitel 1278