Sep 6, 2026 - 01:24 AM

பெல்ஜியத்தின் பிரஸ்ஸல்ஸ் நகரில் நடைபெற்ற டைமண்ட் லீக் இறுதிப் போட்டியின் ஆண்களுக்கான ஈட்டி எறிதல் போட்டியில் இலங்கையின் நட்சத்திர வீரர் ருமேஷ் தரங்க முதலிடத்தை பெற்றுள்ளார்.
இதில் அவர் 89.04 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து இந்த திறமையை வெளிப்படுத்தினார்.
இப்போட்டியின் இரண்டாம் இடத்தை போலந்தின் டேவிட் வேக்னர் 87.47 மீற்றர் தூரத்திற்கு ஈட்டியை எறிந்து பெற்றுக்கொண்டார்.



























