Sep 7, 2026 - 12:40 PM

பிக் பாஸ் 10 ஆம் சீசன் இன்று (07) பிரம்மாண்டமாக தொடங்கி இருக்கிறது. விஜய் சேதுபதி இந்த வருடமும் தொகுத்து வழங்குகிறார்.
ஒரே நாளில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி என பல மொழிகளில் பிக் பாஸ் ஷோ தொடங்கி இருக்கிறது.
பிக் பாஸ் தொடங்கியதும் நான்கு மொழி தொகுப்பாளர்களும் ஒன்றாக வீடியோ கான்பரென்சில் பேசினார்கள்.
அப்போது விஜய் சேதுபதி மீசை இல்லாமல் இருப்பது பற்றி மோகன்லால் கமெண்ட் செய்தார். "மீசை இல்லாமல் லுக்கில் சூப்பரா இருக்கீங்க" என மோகன்லால் கூற, சார் நாம ரெண்டுபேரும் பக்கத்து பக்கத்து பில்டிங்கில் தான் இருக்கிறேன் என விஜய் சேதுபதி கூறினார்.
தமிழ் பிக் பாஸ் மட்டுமின்றி மலையாள பிக் பாஸ் ஷூட்டிங்கும் சென்னையில் தான் நடக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.



























