Sep 8, 2026 - 10:30 AM

வரலாற்றுச் சிறப்புமிக்க யாழ்ப்பாணம் நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழாவின் 22 ஆம் நாள் திருவிழாவான வேட்டைத் திருவிழா நேற்று (07) சிறப்பாக இடம்பெற்றது.
நேற்றைய உற்சவத்தில் எம்பெருமான் குதிரை வாகனத்தில் எழுந்தருளி, ஆலய வீதிகளில் வலம்வந்து பக்தர்களுக்கு அருள்காட்சி வழங்கினார். இதனை முன்னிட்டு, கட்டியம் கூறப்பட்டு பாரம்பரிய மரபுகளுடன் வீதி உலா மிகச் சிறப்பாக நடைபெற்றது.



























