Sep 8, 2026 - 09:03 PM

ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் உரையாற்றுவதற்காக வெளிநாட்டலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் எதிர்வரும் 26 ஆம் திகதி இலங்கையிலிருந்து புறப்படவுள்ளார்.
இதற்கமைய, எதிர்வரும் 28 ஆம் திகதி இலங்கை சார்பில் அவர் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபைக் கூட்டத் தொடரில் உரையாற்றவுள்ளார்.
ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் 81 வது அமர்வு எதிர்வரும் 28 ஆம் திகதி நியூயோர்க்கில் நடைபெறவுள்ளது.



























