Header Logo
Vallibel FD
வணிகம்
SLT-MOBITEL தேசிய வியாபார சிறப்பு விருதுகள் 2026 இல் மூன்று பெருமைக்குரிய கௌரவிப்புகளை சுவீகரிப்பு

Sep 8, 2026 - 11:27 AM

SLT-MOBITEL தேசிய வியாபார சிறப்பு விருதுகள் 2026 இல் மூன்று பெருமைக்குரிய கௌரவிப்புகளை சுவீகரிப்பு
Mobitel Inner 1278

செயற்பாட்டு சிறப்பு, மூலோபாய வினைத்திறன் மற்றும் டிஜிட்டல் சுகாதாரபராமரிப்பு புத்தாக்கம் போன்றவற்றுக்கான கௌரவிப்பைப் பெற்றது SLT-MOBITEL, தேசிய வர்த்தக சிறப்பு விருதுகள் 2026 இல் மூன்று பெருமைக்குரிய விருதுகளை சுவீகரித்து, வியாபார சிறப்புக்கான தனது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்துள்ளது. தேசிய வர்த்தக சம்மேளனத்தினால் கொழும்பு ஷங்கிரி-லா ஹோட்டலில் இந்த விருதுகள் வழங்கும் நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

இந்நிகழ்வில், உட்கட்டமைப்பு மற்றும் பொதுப் பயன்பாடுகள் பிரிவு மற்றும் வினைத்திறன் முகாமைத்துவ சிறப்பு போன்றவற்றில் இரு இரண்டாமிடங்களை SLT PLC பெற்றுக் கொண்டதுடன், அதனூடாக தொழிற்பாட்டு சிறப்பு, மூலோபாய தலைமைத்துவம், புத்தாக்கம் மற்றும் உயர் வினைத்திறனான கலாசாரத்தை ஊக்குவித்தல் போன்றவற்றுக்கான தனது அர்ப்பணிப்பை மீள உறுதி செய்திருந்தது. 

ICT சேவைகள் பிரிவில் தங்க விருதை eChannelling PLC சுவீகரித்தது. புத்தாக்கத்திற்கான தனது தொடர்ச்சியான அர்ப்பணிப்பு மற்றும் இலங்கையில் டிஜிட்டல் சுகாதார பராமரிப்பை மேம்படுத்துவதில் அதன் பங்களிப்பு போன்றவற்றுக்காக இந்த உயர் கௌரவிப்பு வழங்கப்பட்டிருந்தது. சுகாதாரபராமரிப்பு அணுகலை மேம்படுத்துவதற்காக தொழில்னுட்பத்தை பயன்படுத்துவது, சேவை விநியோகத்தை மேம்படுத்தல் மற்றும் நோயாளர்கள் சுகாதார பராமரிப்பு சேவை வழங்குனர்கள் மற்றும் பரந்த சமூகம் போன்றவற்றுக்கு பெறுமதி சேர்த்தல் போன்றவற்றில் தொடர்ச்சியான முயற்சிகளை இந்த கௌரவிப்பு பிரதிபலித்திருந்தது. 

ஒட்டு மொத்தத்தில், இந்த மூன்று விருதுகளினூடாகவும் SLT-MOBITEL இன் தொலைத்தொடர்பாடல்கள், உட்கட்டமைப்பு மற்றும் டிஜிட்டல் சேவைகள் வணிகங்கள் போன்றவற்றில் கொண்டுள்ள நிபுணத்துவம் மற்றும் வினைத்திறன் போன்றன பிரதிபலிக்கப்பட்டுள்ளன. இவை புதுமை, செயல்பாட்டுச் சிறப்பு மற்றும் நிலையான மதிப்பு உருவாக்கம் ஆகியவற்றின் மூலம், பரந்த தொழில்நுட்ப மற்றும் டிஜிட்டல் தீர்வுகளை வழங்கும் நிறுவனமாக மாற முயலும் SLT-MOBITEL இன் தொடர்ச்சியான மாற்றத்தை மேலும் வலுப்படுத்துகின்றன. 

தேசிய வியாபாரச் சிறப்பு விருதுகள், சுயாதீனமான தொழிநுட்ப மற்றும் நிதி மதிப்பீட்டுக் குழுவினால் பல கட்டங்களாக நடத்தப்படும் மதிப்பீட்டைத் தொடர்ந்து, சுயாதீன நடுவர் குழுவின் இறுதி மதிப்பாய்வை உள்ளடக்கிய ஒரு விரிவான மதிப்பீட்டு முறையைப் பின்பற்றுகின்றது. தலைமைத்துவம், மூலோபாயம், ஆளுமை, செயல்பாட்டுத் திறன், நிலைபேறுதன்மை மற்றும் ஒட்டுமொத்த வணிகச் சிறப்பு ஆகியவற்றில் சிறந்து விளங்கும் நிறுவனங்களை இந்த நன்கு நிறுவப்பட்ட மதிப்பீட்டு முறைமை அங்கீகரிக்கிறது. இது இலங்கையின் மிகவும் மதிப்பிற்குரிய கார்ப்பரேட் அங்கீகாரத் தளங்களில் ஒன்றாக இவ்விருதுகளின் இடத்தைப் பலப்படுத்துகிறது. 

SLT-MOBITEL தனது நிலைமாற்றப் பயணத்தைத் தொடர்ந்து முன்னெடுத்து வரும் நிலையில், இவ்விருதுகள் வாடிக்கையாளர்கள், பங்குதாரர்கள் மற்றும் நாட்டிற்கு நீடித்த மதிப்பை உருவாக்குவதோடு, இலங்கையின் டிஜிட்டல் மாற்றம் மற்றும் பொருளாதார முன்னேற்றத்திற்குப் பங்களிப்பதற்கான அதன் அர்ப்பணிப்பை மேலும் வலுப்படுத்துகின்றன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

இலங்கையில் டிக்டொக் செயலியைத் தடை செய்ய வேண்டும்!

இலங்கையில் டிக்டொக் செயலியைத் தடை செய்ய வேண்டும்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

தண்டாயுதபாணி உற்சவம்!

தண்டாயுதபாணி உற்சவம்!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

Mobitel 1278