Sep 8, 2026 - 11:34 AM

வவுனியாவில் 1,700 போதை மாத்திரைகளுடன் இரு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸார் தெரிவித்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில், கோவில்குளம் மற்றும் சமளங்குளம் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட விசேட நடவடிக்கையின்போது குறித்த இரு இளைஞர்களும் கைது செய்யப்பட்டனர்.
இதன்போது, அவர்களிடமிருந்து 1,700 போதை மாத்திரைகள் பொலிஸாரால் மீட்கப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவின் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் ராஜபக்ச தலைமையில், சமந்த (24220), திசாநாயக்க (74209), மிதுசன் (91800), சனத் (25522), சுபுன் (100959) உள்ளிட்ட பொலிஸ் குழுவினர் இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டனர்.
கைது செய்யப்பட்ட இருவரையும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.



























