Header Logo
Vallibel FD
வணிகம்
கொமர்ஷல் வங்கியானது நல்லூர் திருவிழாவிற்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் Q+ டிஜிட்டல் கொடுப்பனவு ஊக்குவிப்பு நடவடிக்கையை முன்னெடுத்தது

Sep 8, 2026 - 11:43 AM

கொமர்ஷல் வங்கியானது நல்லூர் திருவிழாவிற்கு முன்னதாக யாழ்ப்பாணத்தில் Q+ டிஜிட்டல் கொடுப்பனவு ஊக்குவிப்பு நடவடிக்கையை முன்னெடுத்தது
Mobitel Inner 1278

நாட்டை நிலையான டிஜிட்டல் பொருளாதாரத்தை நோக்கி வழிநடத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை மீண்டும் உறுதிப்படுத்தும் வகையில், கொமர்ஷல் வங்கியானது தனது டிஜிட்டல் கொடுப்பனவு ஊக்குவிப்பு நடவடிக்கையை யாழ்ப்பாணத்திற்கு விரிவுபடுத்தியுள்ளது. 

இலங்கை மத்திய வங்கியின் (CBSL) தேசிய டிஜிட்டல் கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில், ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தில் வங்கி இதுவரை மேற்கொண்ட மிக விரிவான வர்த்தகர்களை அணுகும் விழிப்புணர்வு நடவடிக்கையாக இது அமைந்துள்ளது. 

இலங்கை மத்திய வங்கியின் 2026 ஆம் ஆண்டிற்கான மூன்றாவது டிஜிட்டல் கொடுப்பனவு ஊக்குவிப்புத் திட்டத்தின் ஒரு பகுதியாக மேற்கொள்ளப்பட்ட இந்த முன்முயற்சியானது, வங்கியின் Q+ கொடுப்பனவுச் செயலியை (Q+ Payment App) மையமாகக் கொண்டு அமைந்ததுடன், வட மாகாணத்தின் மிகப்பெரிய ஆன்மீக மற்றும் வர்த்தக நிகழ்வுகளில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் திருவிழாவிற்கு முன்னதாக திட்டமிடப்பட்டு முன்னெடுக்கப்பட்டது. 

வட மாகாணத்தில் பணமில்லாக் (cashless) கொடுப்பனவுகளின் எல்லையை விரிவுபடுத்துவதற்கும், அன்றாடப் பயன்பாட்டை ஊக்குவிப்பதற்கும் மத்திய வங்கி மேற்கொண்டு வரும் முயற்சிகளுக்கு ஆதரவளிக்கும் வகையில், கொமர்ஷல் வங்கியின் அட்டை நிலையத்தின் (Card Centre) Q+ விற்பனை மற்றும் Q+ வர்த்தக உள்ளீர்ப்பு (Q+ Merchant Acquisition) குழுக்கள், யாழ்ப்பாண நகரப் பகுதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 350 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்களை நேரடியாக அணுகித் தெளிவுபடுத்தல்களை வழங்கின. அத்துடன், இந்த ஊக்குவிப்புக் காலப்பகுதியில் 40 இற்கும் மேற்பட்ட வர்த்தகர்களுக்காக பிரத்தியேக பணம் திரும்பப் பெறும் (cashback) சலுகை விழிப்புணர்வுப் பிரச்சாரமும் செயல்படுத்தப்பட்டது. 

யாழ்ப்பாணத்தின் முன்னணி ஆடை விற்பனை நிலையங்கள், உணவகங்கள் மற்றும் இதர முக்கிய வர்த்தக நிறுவனங்கள் இதில் பங்கெடுத்திருந்தன. இதன் மூலம் வாடிக்கையாளர்கள் தங்களது Q+ செயலி ஊடாக இலகுவாகவும், விரைவாகவும், தொடுகையற்ற முறையிலும் கொடுப்பனவுகளை மேற்கொள்வதற்கான வலையமைப்பு கணிசமாக விரிவுபடுத்தப்பட்டுள்ளதுடன், சிறப்பு Cashback வெகுமதிகளைப் பெறும் வாய்ப்பும் அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

வட மாகாண ஆளுநர் மற்றும் இலங்கை மத்திய வங்கியின் கொடுப்பனவுகள் மற்றும் கொடுப்பனவுத் தீர்வு திணைக்களத்தின் பிரதிநிதிகள் உள்ளிட்ட சிரேஷ்ட அதிகாரிகளின் பங்கேற்பு, இப்பிராந்தியத்தில் டிஜிட்டல் மயமாக்கலை விரைவுபடுத்துவதற்கான நிறுவன ரீதியான ஆதரவை மேலும் வலுப்படுத்தியது. இந்நிகழ்வின் முக்கிய அம்சமாக, யாழ்ப்பாணம் TCT Multi Trade நிறுவனத்தின் உரிமையாளரான திரு. வாமதேவ தியாகேந்திரன் அவர்களிடம் QR கொடுப்பனவு வசதியை, கொமர்ஷல் வங்கியின் அட்டை நிலையத்தின் பிரதான முகாமையாளர் மற்றும் வட பிராந்திய முகாமையாளர் ஆகியோர் இணைந்து கையளித்தனர். 

யாழ்ப்பாணத்தில் வங்கியின் இந்த ஊக்குவிப்பு நடவடிக்கை, வர்த்தகர்களைக் கண்டறிந்து இணைத்துக் கொள்ளுதல், QR பதிவு, வர்த்தக அடையாளப்படுத்துதல் (Merchant Branding) மற்றும் வாடிக்கையாளர்களுக்கான நேரடி விளக்கக்காட்சிகளுடன் கூடிய Q+ கொடுப்பனவு விழிப்புணர்வு போன்ற பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக அமைந்திருந்தது. இலங்கை மத்திய வங்கியின் பிரதான நிகழ்வில் அமைக்கப்பட்டிருந்த முழுமையாக முத்திரை பதித்த Q+ விளம்பரச் சாவடி, வாடிக்கையாளர்களும் ஏனைய பார்வையாளர்களும் டிஜிட்டல் கொடுப்பனவுகள் பற்றி அறிந்து கொள்வதற்கும், QR பரிவர்த்தனைகளின் வசதிகளை நேரடியாக அனுபவிப்பதற்கும் கூடுதல் தளமாக அமைந்தது. வங்கியின் இந்த முன்முயற்சியானது வெறும் விளம்பர ஊக்குவிப்புடன் நின்றுவிடாமல், இப்பிராந்தியத்தில் நிலையான டிஜிட்டல் கொடுப்பனவு பழக்கவழக்கத்தை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டு அமைந்திருந்தது. 

இம்முறை மேற்கொள்ளப்பட்ட வர்த்தகர்களை அணுகும் விழிப்புணர்வின் அளவு, யாழ்ப்பாண ஊக்குவிப்பு நடவடிக்கையை மிகவும் குறிப்பிடத்தக்கதாக மாற்றியுள்ளதாக வங்கி தெரிவித்துள்ளது. இலங்கை மத்திய வங்கியின் ஊக்குவிப்புத் தொடரின் திருகோணமலைப் பகுதியில் இணைக்கப்பட்ட வர்த்தகர்களின் எண்ணிக்கையை விட, யாழ்ப்பாணத்தில் அணுகப்பட்ட வர்த்தகர்களின் எண்ணிக்கை ஏழு மடங்கிற்கும் அதிகமாகும். Q+ மற்றும் QR கொடுப்பனவுகள் தொடர்பாக வாடிக்கையாளர்களும் வர்த்தகர்களும் காட்டிய நேர்மறையான வரவேற்பும் ஆர்வமும், யாழ்ப்பாணத்திலும் ஒட்டுமொத்த வட மாகாணத்திலும் டிஜிட்டல் கொடுப்பனவுகள் மேலும் விரிவடைவதற்கான வலுவான சாத்தியக்கூறுகளை வெளிப்படுத்தியுள்ளது. மேலும், நல்லூர் திருவிழாவிற்கு முன்னதாக இந்த நடவடிக்கையை மேற்கொண்டமையானது, திருவிழாக் காலத்தில் வாடிக்கையாளர்கள் மேற்கொள்ளும் அதிகளவிலான கொள்வனவுகளின் போது Q+ செயலியைப் பயன்படுத்துவதற்கு ஏதுவாகவும் அமைந்திருந்தது. 

கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் அமெரிக்க டொலர் 1 பில்லியனுக்கும் அதிகமான சந்தை மூலதனத்தைக் கொண்ட முதலாவது வங்கியாகவும், ஐக்கிய இராச்சியத்தின் மதிப்பிற்குரிய The Banker சஞ்சிகையால் வெளியிடப்பட்ட 2026 ஆம் ஆண்டிற்கான Top 1000 World Banks தரவரிசையில், முதலிடம் பெற்ற இலங்கையின் வங்கியாகவும் திகழ்கின்றது. 

கொமர்ஷல் வங்கியானது, இலங்கை வங்கித் துறையில் அதிக சந்தை மூலதனத்தைக் கொண்டுள்ளதுடன், மிகப்பெரிய தனியார் துறை கடன் வழங்குநராகவும், SME துறைக்கு மிகப்பெரிய கடன் வழங்குநராகவும் உள்ளது. Business Today இதழின் Top 40 தரவரிசையில் முதலிடம் பெற்றுள்ள கொமர்ஷல் வங்கியானது, இலங்கையில் மிகவும் மதிப்பிற்குரிய வங்கியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளதுடன், அதிக விருதுகளை வென்ற வங்கியாகவும் திகழ்கின்றது. மேலும், டிஜிட்டல் புத்தாக்கங்களில் முன்னணியும் வகிக்கும் கொமர்ஷல் வங்கியானது, இலங்கையின் முதலாவது 100% கார்பன்-நடுநிலை பேணும் வங்கியுமாகும். 

கொமர்ஷல் வங்கியானது நாடு முழுவதும் தந்திரோபாயரீதியாக அமைக்கப்பட்ட கிளைகள் மற்றும் தானியங்கி இயந்திரங்களின் வலையமைப்பைச் செயற்படுத்திவருகின்றது. மேலும், பங்களாதேஷில் 20 கிளைகள், மாலைதீவில் பெரும்பான்மையான பங்குகளைக் கொண்ட ஒரு முழுமையான Tier I வங்கி, மியான்மாரில் ஒரு நுண்நிதி நிறுவனம் என சர்வதேச ரீதியில் பரந்தளவில் தடம் பதித்த இலங்கையின் வங்கியாகத் தன்னை நிலைநிறுத்தியுள்ளது. துபாய் சர்வதேச நிதியியல் மையத்தில் (DIFC) ஒரு பிரதிநிதி அலுவலகத்தை நிறுவுவதற்கு துபாய் சர்வதேச நிதியியல் சேவைகள் அதிகாரசபையிடமிருந்து அனுமதிபெற்றதுடன் இவ் மைல்கல்லை எட்டிய இலங்கையின் முதல் வங்கியாகத் தன்னைப் பதிவுசெய்துள்ளது. 

மேலும்,வங்கியின் முழுமையான உரித்துடைய துணை நிறுவனங்களான CBC Finance Ltd மற்றும் Commercial Insurance Brokers (Pvt) Limited ஆகியவையும் தங்கள் சொந்த கிளை வலையமைப்புகள் மூலம் பல்வேறு நிதிச் சேவைகளை வழங்குகின்றன.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ
01
இலங்கையின் இளைஞர்களுக்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பட்டக் கற்கைகளை அணுகுவதற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் முத்தரப்பு உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கையின் இளைஞர்களுக்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பட்டக் கற்கைகளை அணுகுவதற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் முத்தரப்பு உடன்படிக்கை கைச்சாத்து

Sep 8, 2026 - 04:30 PM


காணொளி
எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

தண்டாயுதபாணி உற்சவம்!

தண்டாயுதபாணி உற்சவம்!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

Mobitel 1278