Header Logo
Vallibel FD
பல்சுவை
பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் அகற்றம்!

Sep 8, 2026 - 11:44 AM

பெண்ணின் வயிற்றில் இருந்து 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் அகற்றம்!
Mobitel Inner 1278

இந்தியாவின் ஆந்திரப் பிரதேசம், பல்நாடு மாவட்டம், நரசராவ்பேட்டை மண்டலத்திற்கு உட்பட்ட பெட்லூரிவாரிபாலெம் கிராமத்தைச் சேர்ந்த 33 வயது பெண் ஒருவர், கடந்த சில நாட்களாகக் கடுமையான நெஞ்சு மற்றும் வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்தார். வலியின் தாக்கம் அதிகரித்ததையடுத்து, அவரது குடும்பத்தினர் அவரை நரசராவ்பேட்டையில் உள்ள மாதாஸ்ரீ என்ற தனியார் வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்த்தனர். 

வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பெண்ணுக்குக் முதல்கட்டப் பரிசோதனைகள் மற்றும் வயிற்றுப்பகுதி ஸ்கேனிங் செய்யப்பட்டது. 

ஸ்கேன் அறிக்கையைப் பார்த்த வைத்தியர்கள் அதிர்ச்சியில் உறைந்தனர். அப்பெண்ணின் வயிற்றுக்குள் ஏராளமான அநாவசியப் பொருட்கள் உள்கொள்ளப்பட்டுச் சிக்கியிருப்பது தெரியவந்தது. 

வைத்தியர் பி.ராமசந்திர ரெட்டி தலைமையிலான நிபுணர் குழுவினர், பெண்ணுக்கு உடனடியாக 'லாப்ரோஸ்கோபி' எனும் நுண் துளை அறுவை சிகிச்சையைத் தொடங்கினர். வயிற்றுப் பகுதியில் சிறிய துளையிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த அறுவை சிகிச்சையின் மூலம், பெண்ணின் வயிற்றிலிருந்து மொத்தம் 14 பேனாக்கள், 5 மரக் கரண்டிகள் மற்றும் 1 மெழுகுவர்த்தி ஆகிய 20 பொருட்கள் பத்திரமாக வெளியே எடுக்கப்பட்டன. 

வெளியே எடுக்கப்பட்ட பேனாக்களில் ஒன்றின் மூடி கழன்ற நிலையில் இருந்தது. அந்தப் பேனாவின் கூர்மையான பகுதி பெண்ணின் வயிற்றின் உட்புறச் சுவரில் குத்தியதால் தான் அவருக்குத் தாங்க முடியாத அளவு கடுமையான வலியும் அசௌகரியமும் ஏற்பட்டுள்ளது என்று வைத்தியர்கள் தெரிவித்தனர். தற்போது அப்பெண் நலமாக இயல்பு நிலைக்குத் திரும்பி வருகிறார். 

அப்பெண் இவ்வளவு பொருட்களை எவ்வாறு விழுங்கினார் என்பது குறித்து ஆராய்ந்தபோது, அவர் கடந்த 10 ஆண்டுகளாகப் மனநலப் பாதிப்பினால் சிகிச்சையில் இருந்து வந்தது தெரியவந்தது. மேலும், இரண்டு மாதங்களுக்கு முன்பாகவே அவரது கணவர் அவரை விவாகரத்து செய்துள்ளார். உணவு அல்லாத பிற தேவையற்ற பொருட்களை உண்ணும் ‘பைகா சின்ட்ரோம்’ அல்லது தீவிர மன அழுத்தப் பாதிப்பே பெண்ணின் இந்தச் செயலுக்குக் காரணமாக இருக்கலாம் என வைத்தியர்கள் கணித்துள்ளனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ
01
இலங்கையின் இளைஞர்களுக்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பட்டக் கற்கைகளை அணுகுவதற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் முத்தரப்பு உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கையின் இளைஞர்களுக்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பட்டக் கற்கைகளை அணுகுவதற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் முத்தரப்பு உடன்படிக்கை கைச்சாத்து

Sep 8, 2026 - 04:30 PM


காணொளி
எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

தண்டாயுதபாணி உற்சவம்!

தண்டாயுதபாணி உற்சவம்!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

Mobitel 1278