Sep 8, 2026 - 11:54 AM

அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் இத்திட்டத்தின் ஊடாக 6,108 பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் 1 மில்லியன் மாணவிகள் பயனடைந்து வருகின்றனர்; ஆரம்பம் முதலே இத்திட்டத்திற்கு Fems ஆதரவளித்து வருகிறது நாடெங்கிலும் பல பகுதிகளில் உள்ள பாடசாலை மாணவிகளுக்கு, மாதவிடாய் காலத்தை கண்ணியத்துடன் கையாள்வது இன்றும் சவால் மிக்கதாகவே உள்ளது. மாதவிடாய் தூய்மை அணையாடைகள் வாங்குவதற்கான செலவு மட்டுமல்லாது, மாதவிடாய் தொடர்பான மௌனம், சமூகத் தயக்கம் மற்றும் போதிய தகவல் இல்லாமை ஆகியவையும் இச் சவாலை மேலும் தீவிரப்படுத்துகின்றன. மாதவிடாய் சுகாதாரம் தொடர்பான மட்டுப்படுத்தப்பட்ட விழிப்புணர்வு, வீட்டிலும் பாடசாலையிலும் மாதவிடாய் குறித்து வெளிப்படையாகப் பேசுவதில் காணப்படும் தயக்கம், அத்துடன் பயன்படுத்தப்பட்ட மாதவிடாய் தூய்மை அணையாடைகளை முறையாக அகற்றுவதற்கான வசதிகள் இல்லாமை ஆகியவை ஒன்றிணைந்து, பல மாணவிகள் பாடசாலைக்குச் செல்லாமல் இருப்பதற்கும் அல்லது பாதுகாப்பற்ற முறையில் மாதவிடாயைக் கையாள்வதற்கும் வழிவகுக்கின்றன.
Hemas Consumer Brands நிறுவனத்தின் முன்னணி பெண்கள் சுகாதாரத் தூய்மை வர்த்தகநாமமான Fems, அரசாங்கத் தரப்பினருடன் இணைந்து இத் தடைகளை தனியொரு நடவடிக்கையின் மூலம் அல்லாமல் அணுகல், விழிப்புணர்வு மற்றும் உட்கட்டமைப்பு ஆகியவற்றை ஒருங்கிணைத்த அணுகுமுறை மூலம் குறைப்பதற்கு செயலாற்றி வருகிறது. இதன் முக்கிய அங்கமாக, கல்வி அமைச்சினால் 2024 ஜூன் மாதம் ஆரம்பிக்கப்பட்ட அரசாங்கத்தின் ‘திலினபத்’ திட்டம் ஊடாக தரம் 6 மற்றும் அதற்கு மேற்பட்ட தரங்களில் கல்வி பயிலும் பாடசாலை மாணவிகளுக்கு இலவச மாதவிடாய் தூய்மை அணையாடைகளை வழங்குகிறது. தற்போது, நாடளாவிய ரீதியில் 6,108 அரசாங்க மற்றும் அரசாங்க உதவி பெறும் விசேட பாடசாலைகளைச் சேர்ந்த சுமார் ஒரு மில்லியன் மாணவிகளை இத்திட்டம் சென்றடைந்துள்ளது. ஆரம்பம் முதலே இத்திட்டத்தின் முக்கிய வர்த்தகநாமப் பங்காளராக இணைந்துள்ள Fems, மாணவிகள் தமக்கான ஒதுக்கீட்டைப் பயன்படுத்தி, தாம் விரும்பும் வர்த்தகநாமத்தையும் வகையையும் தமது பாடசாலை வளாகத்திலேயே பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வழங்கி வருகிறது.
Hemas Consumer Brands நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் பொது முகாமையாளர் சசினி கமகே கூறுகையில், “திலினபத் என்பது பாடசாலை மாணவிகளுக்கு மாதவிடாய் தூய்மை அணையாடைகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பை வலுப்படுத்துவதற்காக அரசாங்கத்தின் ஆதரவுடன் முன்னெடுக்கப்படும் திட்டம் ஆகும். ஆரம்பம் முதலே இத் திட்டத்துடன் இணைந்து செயலாற்றுவதன் மூலம், மாணவிகளுக்கு எவ்வித செலவுமின்றி ஒரு வருடத்திற்குத் தேவையான மாதவிடாய் தூய்மை அணையாடைகளை வழங்குவதுடன், அவர்கள் விரும்பும் வர்த்தகநாமத்தையும் வகையையும் சுயமாகத் தெரிவுசெய்யும் வாய்ப்பையும் வழங்க முடிந்துள்ளது.” என்றார்.
எனினும், மாதவிடாய் சுகாதாரத் தயாரிப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு என்பது இத் திட்டத்தின் ஒரு பகுதி மட்டுமே. மாதவிடாய் சுகாதாரம் தொடர்பான கல்வியறிவில் காணப்படும் இடைவெளிகளை குறைப்பதற்காக Fems, “Api Katha Karamu” (Let’s Talk) என்னும் மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான கல்வித் திட்டத்தின் ஊடாக பாடசாலை மட்டத்தில் மாணவிகளுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறது. இத்திட்டத்தின் கீழ் தகைமை பெற்ற மருத்துவ நிபுணர்கள் பாடசாலைகளுக்குச் சென்று, மாணவிகளுடன் மாதவிடாய் சுகாதாரம், தூய்மையான நடைமுறைகள் மற்றும் மாதவிடாய் காலத்தை முறையாகக் கையாள்வது தொடர்பில் வெளிப்படையாகக் கலந்துரையாடுகின்றனர். 2021ஆம் ஆண்டு முதல் நாடளாவிய ரீதியில் 250,000இற்கும் மேற்பட்ட மாணவிகளைச் சென்றடைந்துள்ள இத்திட்டம், பெரும்பாலும் பேசப்படாத விடயமாகக் கருதப்படும் மாதவிடாய் தொடர்பான கலந்துரையாடல்களை இயல்பானதாக்குவதுடன், மாணவிகளுக்கு சரியானதும், நடைமுறைக்கு ஏற்றதுமான தகவல்களையும் வழங்கி வருகிறது.
மாதவிடாய் சுகாதாரப் பயணத்தில் பெரிதும் பேசப்படாத மற்றொரு முக்கிய அம்சமான பயன்படுத்தப்பட்ட சுகாதாரத் தயாரிப்புகளை பாதுகாப்பாகவும் கண்ணியமாகவும் அகற்றுவதிலும் Fems கவனம் செலுத்தி வருகிறது. பல பாடசாலைகளில் சுகாதாரக் கழிவுகளை முறையாக அகற்றுவதற்கான வசதிகள் இல்லாத நிலையில், மாணவிகள் அவற்றை சுகாதாரமானதும் தனிப்பட்ட முறையிலும் அகற்றுவதற்கு சிரமங்களை எதிர்கொள்கின்றனர். மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் வழிகாட்டுதலுடன் முன்னெடுக்கப்படும் Purple Bin திட்டத்தின் மூலம் Fems, பாடசாலைகளில் இதற்கென தனியான கழிவுச் சேகரிப்புத் தொட்டிகளை அறிமுகப்படுத்தியுள்ளதுடன், அவற்றை முறையாகப் பயன்படுத்துவது தொடர்பான விழிப்புணர்வு அமர்வுகளையும் நடத்தி வருகிறது. இத் தொட்டிகளில் சேகரிக்கப்படும் கழிவுகளை, இலங்கையின் மிகப்பெரிய மையப்படுத்தப்பட்ட மருத்துவக் கழிவு முகாமைத்துவ நிலையத்தை இயக்கும் அங்கீகரிக்கப்பட்ட கழிவு முகாமைத்துவ நிறுவனமான Sisili Hanaro Encare, சுற்றாடலுக்கு பாதிப்பில்லாத வகையில் முறையாக அகற்றுகிறது.
இம் முயற்சிகள் அனைத்தும் ஒருங்கே, மாதவிடாய் தூய்மை அணையாடைப் பொதியொன்றின் விலையைத் தாண்டி, மாணவிகள் தமது மாதவிடாய் காலத்தை நம்பிக்கையுடனும் கண்ணியத்துடனும் கையாள்வதற்குத் தேவையான கல்வி, விழிப்புணர்வு, மாதவிடாய் தூய்மை அணையாடைகளை பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு மற்றும் கழிவகற்றல் உட்கட்டமைப்பு ஆகியவற்றை உள்ளடக்கிய விரிவான அணுகுமுறையை பிரதிபலிக்கின்றன. இலங்கை முழுவதும் உள்ள பாடசாலை மாணவிகளுக்கான மாதவிடாய் சுகாதாரம் மற்றும் தூய்மை தொடர்பான நிலைமைகளை மேம்படுத்தும் நோக்கில், கல்வி அமைச்சு மற்றும் ஏனைய அரசாங்கத் தரப்பினருடன் இணைந்து முன்னெடுக்கப்படும் Femsஇன் பரந்த உறுதிப்பாட்டில் ‘திலினபத்’ திட்டம் தொடர்ந்து முக்கிய பங்களிப்பாகத் திகழ்கிறது.



























