Sep 8, 2026 - 11:56 AM

ஒரு 100 நாட்கள் எல்லோருக்கும் பொழுதுபோக்காக இருக்கும் வகையில் பிரம்மாண்ட நிகழ்ச்சி தொடங்கிவிட்டது.
விஜய் டிவியில் கடந்த செப்டம்பர் 6 ஆம் திகதி 105 நாட்கள், கலக்கல் போட்டியாளர்களுடன் விஜய் சேதுபதி தொகுத்து வழங்க சூப்பர் ரியாலிட்டி ஷோ தொடங்கிவிட்டது. வழக்கமான பிக்பாஸ் நிகழ்ச்சியாக இல்லாமல் ஆரம்பமே நிறைய மாற்றங்களுடன் துவங்கப்பட்டுள்ளது.
நிகழ்ச்சி ஆரம்ப மேடையிலேயே ஓட்டிங் தொடங்கி அதிரடி போட்டியாளர்கள் தேர்வு நடந்தது.
பிக்பாஸ் 10 ஆவது சீசனும் தொடங்க ஆர்வமாக நிகழ்ச்சியை காண தொடங்கிவிட்டனர் ரசிகர்கள்.
10 ஆவது சீசன் தொடங்கி 2 ஆவது நாளின் முதல் புரொமோ வெளியாகியுள்ளது. அதில், 10 ஆவது சீசனில் வீட்டின் முதல் தலைவராக தேர்வாகியுள்ள ஷதிகா தனது வேலையை சரியாக செய்து வருகிறார்.
ஆனால் அவரது முடிவில் கருத்து வேறுபாடு ஏற்பட போட்டியாளர் மற்றும் தலைவரிடையே சண்டை தொடங்கியுள்ளது. இதோ முதல் புரொமோ,



























