Header Logo
Vallibel FD
வணிகம்
Vietjet இன் மூன்று நாள் 9.9 sale ஊடாக வியட்னாமுக்கான விமானப் பயணச் சீட்டுகள் USD90 எனும் கட்டணத்திலிருந்து கிடைக்கின்றன

Sep 8, 2026 - 12:02 PM

Vietjet இன் மூன்று நாள் 9.9 sale ஊடாக வியட்னாமுக்கான விமானப் பயணச் சீட்டுகள் USD90 எனும் கட்டணத்திலிருந்து கிடைக்கின்றன
Mobitel Inner 1278

Vietjet இலங்கையின் பயணிகளுக்கு தமது அடுத்த பிரயாணத்தை திட்டமிடுவதற்கான மற்றுமொரு காரணத்தை வழங்கியுள்ளது. புதிதாக ஆரம்பிக்கப்பட்ட கொழும்பு - Ho Chi Minh City இடையிலான விமானப் பயண சேவைகளுக்கு. மூன்று நாட்களுக்கு முன்னெடுக்கும் 9.9 sale ஊடாக, ஒரு வழிக் கட்டணமாக USD90 ஐ (வரிகள் மற்றும் கட்டணங்கள் அடங்கலாக) அறவிடுவதுடன், Deluxe அடிப்படைக் கட்டணத்தில் 22% விலைக்கழிவையும் வழங்குகின்றது. 

விற்பனைச் சலுகை செப்டெம்பர் 7, 2026 இரவு 22:30 மணி முதல் செப்டெம்பர் 10, 2026 இரவு 21:30 மணி வரை (இலங்கை நேரப்படி) நடைமுறையில் இருக்கும். இதில் விளம்பரக் கட்டணத்தின்கீழான Eco கட்டணங்கள் வியட்நாமின் உள்நாட்டு மற்றும் சர்வதேச விமானப் பாதைகளுக்குக் கிடைக்கும். அத்துடன் SALE99 என்ற விளம்பரக் குறியீட்டைப் பயன்படுத்துவதன் மூலம் சர்வதேச விமானங்களுக்கான Deluxe விலைக்கழிவைப் பெறலாம். www.vietjetair.com இணையதளம் மற்றும் “Vietjet Air” மொபைல் app வாயிலாக செப்டெம்பர் 10, 2026 முதல் மார்ச் 31, 2027 வரையிலான பயணக் காலத்திற்கு முன்பதிவு செய்ய முடியும் (விதிவிலக்கு அளிக்கப்பட்ட குறிப்பிட்ட திகதிகள் பொருந்தும்). 

ஓகஸ்ட் 18, 2026 கொழும்பில் இருந்து Ho Chi Minh City இற்கான நேரடி விமானச் சேவையைத் தொடங்கியதில் இருந்து, Vietjet நிறுவனம் இலங்கைப் பயணிகளை வியட்நாமுடன் இணைப்பதுடன், தனது முக்கிய மையங்களில் ஒன்றின் ஊடாக ஆசியா, அவுஸ்திரேலியா மற்றும் விரைவில் ஐரோப்பாவிற்கு விரிவடையும் தன் பரந்த வலையமைப்பிற்கும் இணைக்கின்றது. இவ்வாண்டு ஒக்டோபர் மாதம், இந்நிறுவனம் Hanoi இல் இருந்து Almaty மற்றும் Prague ஆகிய நகரங்களுக்கான புதிய சேவைகளைத் ஆரம்பிக்கவுள்ளதுடன், இது ஐரோப்பிய ஒன்றியச் சந்தையில் அதன் அறிமுகத்தைக் குறிக்கின்றது. மேலும் பல புதிய விமானப் பாதைகள் இவ்வாண்டின் பிற்பகுதியிலும் அடுத்த ஆண்டின் தொடக்கத்திலும் வியட்நாமுக்கும் ஜப்பான், பிலிப்பைன்ஸ், சிங்கப்பூர், தாய்லாந்து மற்றும் அவுஸ்திரேலியா ஆகிய நாடுகளுக்கும் இடையே அறிமுகப்படுத்தப்படவுள்ளன. இப்புதிய இணைப்புகள் வியட்ஜெட்டின் ஹோ சி மின் நகர மையத்தின் ஊடாகக் கொழும்பில் இருந்தான தொடர் பயண இணைப்புகளை மேலும் இலகுவாக்குகின்றன. 

பயணிகளுக்கு, பயண இடத்தைப் போன்று அந்தப் பயணமும் மிகவும் உற்சாகமான ஒன்றாகும். Vietjet இன் நவீன, குறைந்த எரிபொருள் நுகர்வு கொண்ட விமானங்கள், தொழில்முறை மற்றும் அக்கறைமிக்க விமானப் பணிப்பெண்கள், மற்றும் புதிதாகத் தயாரிக்கப்பட்ட சூடான உணவுகளின் தேர்வு ஆகியவை வியட்நாமின் சுவையை விண்வெளியில் அனுபவிக்கச் செய்கின்றன. பயணிகள் pho, banh mi மற்றும் வியட்நாமிய iced milk coffee போன்ற பிரபலமான வியட்நாமிய உணவுகளுடன் சர்வதேச உணவுகளையும் சுவைக்க முடியும். அத்துடன், தரைமட்டத்திலிருந்து 10,000 மீற்றருக்கு மேல் அளிக்கப்படும் கலாச்சார மற்றும் பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் வியட்நாமிய உணர்வை கூடுதல் சுவையுடன் சேர்க்கின்றன. 

Vietjet பற்றி: 

புதுயுக விமானச் சேவை நிறுவனமான Vietjet, வியட்நாமின் வான்வழித் துறையில் புரட்சியை ஏற்படுத்தியுள்ளதுடன், பிராந்திய அளவிலும் உலகளாவிய ரீதியிலும் ஒரு முன்னோடி விமானச் சேவையாகத் திகழ்ந்து வருகின்றது. இந்நிறுவனம் தற்போது 135 விமானங்களைக் கொண்ட கட்டமைப்பை இயக்கி வருவதுடன், பரந்த மற்றும் குறுகிய உடல் அமைப்பைக் கொண்ட இருவகை விமானங்களையும் உள்ளடக்கியதாக கிட்டத்தட்ட 600 புதிய விமானங்களுக்கான கொள்வனவுப் பதிவுகளையும் மேற்கொண்டுள்ளது. செலவின முகாமைத்துவத் திறன், பயனுள்ள செயல்பாடுகள் மற்றும் செயற்திறன் ஆகியவற்றில் கவனம் செலுத்துவதுடன், அனைத்து நடவடிக்கைகளிலும் அதிநவீன தொழில்நுட்பத்தைப் புகுத்தி புதிய போக்குகளுக்குத் தலைமை வகிக்கும் Vietjet, வாடிக்கையாளர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காகப் பலதரப்பட்ட சேவைகளுடன் கூடிய கட்டணச் சேமிப்பு மற்றும் நெகிழ்வுத்தன்மை மிக்க வான்வழிப் பயண வாய்ப்புகளை வழங்குகின்றது. 

Vietjet நிறுவனம், சர்வதேச வான்வழிப் போக்குவரத்து சங்கத்தின் (IATA) செயற்பாட்டு பாதுகாப்பு கணக்காய்வு (IOSA) சான்றிதழைப் பெற்ற ஒரு முழு அளவிலான அங்கத்துவ நிறுவனமாகும். வியட்நாமின் மிகப்பெரிய தனியார் விமானச் சேவை நிறுவனமான இதற்கு, உலகின் ஒரே ஒரு பாதுகாப்பு மற்றும் தயாரிப்பு மதிப்பீட்டு இணையத்தளமான airlineratings.com நிறுவனத்தினால் பாதுகாப்பிற்கான மிக உயர்ந்த 7 நட்சத்திர அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதுடன், Airfinance Journal இனால் தொடர்ந்து பல வருடங்களாக ஆரோக்கியமான நிதிநிலை மற்றும் செயல்பாடுகளைக் கொண்ட உலகின் சிறந்த 50 விமானச் சேவை நிறுவனங்களில் ஒன்றாகவும் பட்டியலிடப்பட்டுள்ளது. அத்துடன், Skytrax, CAPA, Airline Ratings போன்ற புகழ்பெற்ற சர்வதேச அமைப்புகளினால் உலகின் சிறந்த குறைந்த கட்டண விமானச் சேவை நிறுவனம் எனவும் Vietjet பலமுறை பெயரிடப்பட்டுள்ளது. 

மேலதிக தகவல்களுக்கு பார்க்கவும் www.vietjetair.com

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ
01
இலங்கையின் இளைஞர்களுக்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பட்டக் கற்கைகளை அணுகுவதற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் முத்தரப்பு உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கையின் இளைஞர்களுக்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பட்டக் கற்கைகளை அணுகுவதற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் முத்தரப்பு உடன்படிக்கை கைச்சாத்து

Sep 8, 2026 - 04:30 PM


காணொளி
எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

தண்டாயுதபாணி உற்சவம்!

தண்டாயுதபாணி உற்சவம்!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

Mobitel 1278