Header Logo
Vallibel FD
சினிமா
`தி பாரடைஸ்' படத்தின் புதிய ரிலீஸ் திகதி அறிவிப்பு!

Sep 8, 2026 - 12:11 PM

`தி பாரடைஸ்' படத்தின் புதிய ரிலீஸ் திகதி அறிவிப்பு!
Mobitel Inner 1278

‘தி பாரடைஸ்’ திரைப்படம் செப்டம்பர் 24 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. 

நானி நடிப்பில், இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் கடந்த 2023 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘தசரா’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வெற்றி பெற்றது. இதனைத் தொடர்ந்து நானி – ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணி மீண்டும் இணைந்துள்ள திரைப்படம் ‘தி பாரடைஸ்’. எஸ்.எல்.வி. சினிமாஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தில் நானி இதுவரை ஏற்று நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

‘தி பாரடைஸ்’ படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஸ்பானிஷ் மற்றும் ஆங்கிலம் என பல்வேறு மொழிகளில் இப்படம் வெளியாக உள்ளது. மோகன் பாபு, சோனாலி குல்கர்னி, கயாடு லோஹர், சம்பூர்ணேஷ் பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

1980 களின் பின்னணியில் இப்படத்தின் கதை அமைக்கப்பட்டுள்ளது. செகந்திராபாத்தில் ஒடுக்கப்பட்ட பழங்குடியின சமூகத்தினர், அமைப்புரீதியான அடக்குமுறைக்கு எதிராக தங்களது உரிமைகளுக்காக போராடுவதை மையமாக வைத்து கதை உருவாக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

‘தசரா’ படத்தைப் போலவே இப்படத்திலும் நானியின் கதாபாத்திரம் ரசிகர்களிடம் கவனம் பெறும் வகையில் அமைந்துள்ளதாக எதிர்பார்க்கப்படுகிறது. 

சமீபத்தில் வெளியான படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளன. குறிப்பாக ‘யெஷனாகுலா’ பாடலில் நடிகை கீர்த்தி சுரேஷ் சிறப்பு நடனம் ஆடியிருந்தார். இந்த பாடல் இணையத்தில் வைரலானது. இதன் மூலம் ‘தி பாரடைஸ்’ திரைப்படத்தின் மீதான ரசிகர்களின் எதிர்பார்ப்பும் மேலும் அதிகரித்துள்ளது. 

இந்த நிலையில், ‘தி பாரடைஸ்’ திரைப்படம் செப்டம்பர் 24 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. இதனை முன்னிட்டு புதிய போஸ்டரும் வெளியிடப்பட்டுள்ளது. 

மேலும், செப்டம்பர் 23 ஆம் திகதி இரவு இப்படத்தின் சிறப்பு காட்சி திரையிடப்படும் என்றும் படக்குழு அறிவித்துள்ளது. நானி – ஸ்ரீகாந்த் ஒடேலா கூட்டணியின் முந்தைய வெற்றியை தொடர்ந்து உருவாகியுள்ள இப்படம் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யுமா என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ
01
இலங்கையின் இளைஞர்களுக்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பட்டக் கற்கைகளை அணுகுவதற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் முத்தரப்பு உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கையின் இளைஞர்களுக்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பட்டக் கற்கைகளை அணுகுவதற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் முத்தரப்பு உடன்படிக்கை கைச்சாத்து

Sep 8, 2026 - 04:30 PM


காணொளி
எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

தண்டாயுதபாணி உற்சவம்!

தண்டாயுதபாணி உற்சவம்!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

Mobitel 1278