Header Logo
Vallibel FD
செய்திகள்
பல கோடி மதிப்பிலான போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்கவில் இருவர் கைது!

Sep 8, 2026 - 12:21 PM

பல கோடி மதிப்பிலான போதைப்பொருட்களுடன் கட்டுநாயக்கவில் இருவர் கைது!
Mobitel Inner 1278

சுமார் ஐந்து கோடி பதின்மூன்று லட்சத்து எழுபதாயிரம் ரூபாய் மதிப்பிலான 'குஷ்' மற்றும் 'ஹஷீஷ்' போதைப்பொருள் தொகையை சட்டவிரோதமாக இலங்கைக்குக் கொண்டு வந்த இரண்டு வெளிநாட்டு பயணிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து சுங்கப் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். 

இவ்வாறு கைது செய்யப்பட்டவர்கள் 23 மற்றும் 39 வயதுடைய இரண்டு தாய்லாந்து நாட்டவர்களாவர். 

இவர்கள் தாய்லாந்தில் உள்ள இறைச்சிக் கடையொன்றில் இறைச்சி வெட்டுபவர்களாகப் பணிபுரிபவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். 

சந்தேகநபர்கள் இன்று (08) அதிகாலை 12.00 மணிக்கு தாய்லாந்தின் பெங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து சேர்ந்துள்ளனர். 

இதன்போது வருகை முனையத்தில் அறிவிப்பதற்கு எதுவும் இல்லை என்பதைக் குறிக்கும் 'பசுமைப் பாதை' (Green Channel) வழியாகப் போதைப்பொருள் தொகையைக் கடத்திச் செல்ல முயன்றபோது, சுங்க அதிகாரிகளால் இவர்கள் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். 

அங்கு அவர்களின் இரண்டு பயணப் பைகளுக்குள் இருந்த விட்டமின் அடங்கிய 16 கொள்கலன்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 4 கிலோ 496 கிராம் 'குஷ்' போதைப்பொருள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

அதற்கு மேலதிகமாக 'திராட்சைப் பசை' போன்று வெளிப்புறத்தில் தோற்றமளிக்கும் வகையில் பொலித்தீன்களில் சுற்றித் தயாரிக்கப்பட்டிருந்த 641 கிராம் 'ஹஷீஷ்' போதைப்பொருள் தொகையையும் அதிகாரிகள் மீட்டெடுத்துள்ளனர். 

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காகச் சந்தேகநபர்கள் இருவரும் போதைப்பொருள் தொகையும் கட்டுநாயக்க விமான நிலையப் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

இலங்கையில் டிக்டொக் செயலியைத் தடை செய்ய வேண்டும்!

இலங்கையில் டிக்டொக் செயலியைத் தடை செய்ய வேண்டும்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

தண்டாயுதபாணி உற்சவம்!

தண்டாயுதபாணி உற்சவம்!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

Mobitel 1278