Sep 8, 2026 - 01:08 PM

2024 ஆம் ஆண்டு ஜனவரி முதல் 2025 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் வரையிலான காலப்பகுதியில் நாடு முழுவதும் சுமார் 31 சதொச விற்பனையகங்கள் மூடப்பட்டுள்ளதாக வர்த்தக, வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி பிரதி அமைச்சர் ஆர். எம். ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
இன்று (08) பாராளுமன்றத்தில் பாராளுமன்ற உறுப்பினர் சாணக்க மாதுகொட எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
இந்த ஆண்டின் ஓகஸ்ட் மாதம் 17 ஆம் திகதியாகும் போது நாடு முழுவதும் 424 சதொச விற்பனையகங்கள் இயங்குவதாக பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.
தற்போதைய அரசாங்கம் நாட்டின் ஆட்சியைக் பொறுப்பேற்ற போது சதொச நிறுவனம் 24 பில்லியன் ரூபாய் நட்டத்தை எதிர்நோக்கியிருந்ததாக ஆர். எம். ஜயவர்தன இங்கு சுட்டிக்காட்டினார்.
அக்காலப்பகுதியில் குறித்த விற்பனைச் வலையமைப்பு 11 பில்லியன் ரூபாய் கடனையும் 05 பில்லியன் ரூபாய் வங்கி மேலதிகப்பற்றையும் (Bank Overdraft) கொண்டிருந்ததாக பிரதி அமைச்சர் மேலும் தெரிவித்தார்.



























