Sep 8, 2026 - 02:32 PM

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 63 வது வருடாந்த கூட்டத்தொடரில் இலங்கை தொடர்பான மனித உரிமைகள் அறிக்கை சற்றுமுன்னர் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட ஆய்வின் அடிப்படையில் இந்த அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.
இந்த அறிக்கையின் மூலம் நாட்டின் மனித உரிமைகள் நிலைமை, பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கச் செயற்பாடுகள் மீது சர்வதேச கவனம் மீண்டும் திரும்பக்கூடும்.




























