Header Logo
Vallibel FD
சினிமா
'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவின் கடைசி காவியம்!

Sep 8, 2026 - 02:34 PM

'இயக்குநர் இமயம்' பாரதிராஜாவின் கடைசி காவியம்!
Mobitel Inner 1278

பாரதிராஜா இயக்குநராக மட்டுமின்றி, நடிகராகவும் பல படங்களில் தனது முத்திரையைப் பதித்த அவர், இந்த ஆண்டு ஜூன் 10 ஆம் திகதி காலமானார். 

அவரது மறைவு ஒட்டுமொத்தத் திரையுலகிற்கும் பேரிழப்பாக அமைந்த நிலையில், அவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து மறைந்த அவரது கடைசித் திரைப்படமான ‘புலவர்’ படத்தின் டீசர் தற்போது வெளியாகி ரசிகர்களின் நெஞ்சங்களை உருக வைத்துள்ளது. 

பாரதிராஜாவின் இறுதித் திரைப்படைப்பான 'புலவர்' திரைப்படம் வருகிற செப்டம்பர் 25 ஆம் திகதி உலகெங்கும் உள்ள திரையரங்குகளில் அதிகாரப்பூர்வமாக வெளியாகவுள்ளது என்று படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். 

தற்போது வெளியாகியுள்ள ‘புலவர்’ படத்தின் டீசர், ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய கவனத்தைப் பெற்றுள்ளது. 

பாரதிராஜாவின் கம்பீரமான திரைத் தோற்றத்தையும் எதார்த்தமான நடிப்பையும் மீண்டும் ஒருமுறை திரையில் காணும் அரிய வாய்ப்பு ரசிகர்களுக்குக் கிடைத்துள்ளது. 

பாரதிராஜாவின் கடைசித் திரைப்படம் என்பதால், இப்படம் ரசிகர்களுக்கு ஒரு சாதாரணத் திரைப்படமாக இல்லாமல், அவர் திரையில் தோன்றும் கடைசி நினைவாகவும், அவருக்குச் செலுத்தும் உன்னதமான அஞ்சலியாகவும் அமையவுள்ளது. 

இதனால் இப்படத்திற்கு இயல்பாகவே கோலிவுட்டில் பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

இத்திரைப்படத்தை இயக்குநர் முருகையா மிகவும் எதார்த்தமான வாழ்வியல் பின்னணியுடன் இயக்கியுள்ளார். 

பாரதிராஜாவுடன் இணைந்து 'குட் நைட்' பட புகழ் ரேச்சல் ரெபெக்கா, ஹலோ கந்தசாமி, ரவிச்சந்திரன் மற்றும் வெற்றிவேல் ராஜா உள்ளிட்ட பல திறமையான கலைஞர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 

படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்‌ஷன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து, படம் ரிலீசுக்குத் தயாராக உள்ள நிலையில், 'புலவர்' திரைப்படத்தைத் திரையில் காண பாரதிராஜாவின் ரசிகர்களும், சினிமா ஆர்வலர்களும் மிகுந்த ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கின்றனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ
01
இலங்கையின் இளைஞர்களுக்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பட்டக் கற்கைகளை அணுகுவதற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் முத்தரப்பு உடன்படிக்கை கைச்சாத்து

இலங்கையின் இளைஞர்களுக்கு சர்வதேச ரீதியில் ஏற்றுக் கொள்ளப்பட்ட பட்டக் கற்கைகளை அணுகுவதற்கு வசதி ஏற்படுத்தும் வகையில் முத்தரப்பு உடன்படிக்கை கைச்சாத்து

Sep 8, 2026 - 04:30 PM


காணொளி
எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

தண்டாயுதபாணி உற்சவம்!

தண்டாயுதபாணி உற்சவம்!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு என்பது இலங்கைக்குச் சொந்தமானது!

கச்சத்தீவு எங்களுடையது!

கச்சத்தீவு எங்களுடையது!

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

2026 தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

விரிவுரையாளர்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு கோரி போராட்டம்!

Mobitel 1278