Sep 9, 2026 - 11:39 AM

உலகளாவிய வர்ணப்பூச்சு மற்றும் மேற்பூச்சு நிறுவனமும் இலங்கையில் Dulux Paints உற்பத்தியாளருமான AkzoNobel, காலி கலங்கரை விளக்கத்தை அண்மையில் புனரமைப்பு செய்து பராமரிப்புப் பணிகளை மேற்கொண்டதன் மூலம், நாட்டின் புகழ்பெற்ற பாரம்பரிய தலங்களில் ஒன்றைப் பாதுகாக்க உதவியுள்ளது.
உலக பாரம்பரியத் தளமான காலி கோட்டைக்குள் அமைந்துள்ள காலி கலங்கரை விளக்கம், இலங்கையின் மிகப் பழமையான கலங்கரை விளக்க நிலையமாகத் திகழ்கிறது. காலி கலங்கரை விளக்கம் கோட்டைக்குள் மிகவும் எளிதில் அடையாளம் காணக்கூடிய முக்கிய பாரம்பரிய சின்னங்களில் ஒன்றாகும், இது இலங்கையின் தெற்குப் பகுதியில் மட்டுமல்லாமல் முழு நாட்டிலும் பிரபல்யம் பெற்றதாகும். 19ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நிர்மாணிக்கப்பட்ட இந்தகலங்கரை விளக்கமானது, உள்நாட்டு மற்றும் சர்வதேசப் பயணிகளை இன்றும் ஈர்ப்பதாக திகழ்கிறது.
“இலங்கை வளமான வரலாறு மற்றும் பாரம்பரியத்தைக் கொண்ட ஒரு நாடாகும், மேலும் பாதுகாப்பு முயற்சிகளுக்கு ஆதரவளிப்பதிலும், எதிர்கால தலைமுறைக்காக இதுபோன்ற வரலாற்றுச் சின்னங்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பில் பங்காற்றுவதிலும் நாம் பெருமிதம் கொள்கிறோம். இந்தத் திட்டமும் தனித்துவமானதாக இருந்தது, ஏனெனில் வரலாற்றுச் சிறப்புமிக்க அடையாளச் சின்னங்களின் ஒருமைப்பாட்டைப் பாதுகாக்கக்கூடிய புதுமையான மறுசீரமைப்புத் தீர்வுகளை வழங்குவதற்கு AkzoNobel சிறப்பாக நிலைநிறுத்தப்பட்டுள்ளது, அதேவேளையில் சிறப்பு உற்பத்திகள், வழக்கமான பராமரிப்பு தேவைப்படும் இலங்கையின் சவாலான கடலோர காலநிலையிலிருந்து அதைப் பாதுகாக்கவும் முடியும்,” என்று AkzoNobel Sri Lanka நிறுவனத்தின் சந்தைப்படுத்தல் தலைவர் உபேந்திர குணவர்தன தெரிவித்தார்.
AkzoNobel நிறுவனமானது காலி பாரம்பரிய மன்றம், காலி கோட்டை, தொல்லியல் திணைக்களம் - காலி மற்றும் காலி கோட்டை அதிகாரிகளுடன் இணைந்து, கடுமையான கடற்கரைச் சூழலிலிருந்து நீண்ட காலப் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், முழுமையான வர்ணம் பூசுதல் மற்றும் பாதுகாப்பு பூச்சு முறைமை மூலம் காலி கலங்கரை விளக்கத்தைப் பாதுகாக்க செயல்பட்டது.
காலி கலங்கரை விளக்கம் கடுமையான சூரிய ஒளி, பலத்த மழை மற்றும் உப்புக்காற்று ஆகியவற்றிற்கு உட்படுகிறது. எனவே இதற்கு விதிவிலக்கான நீடித்து நிற்கும் தன்மை, காலநிலையைத் தாங்கும் திறன் மற்றும் கடுமையான சுற்றுச்சூழல் நிலைமைகளுக்கு எதிரான நீண்டகாலப் பாதுகாப்பு கொண்ட பொருட்கள் தேவைப்படுகின்றன. பூஞ்சைகள் மற்றும் நச்சுப் பொருட்களை அகற்றுவதற்காக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன மேலும், வானிலை பாதுகாப்பு மற்றும் நீடித்து நிற்கும் தன்மை ஆகியவற்றை வழங்கும் அதே வேளையில், கலங்கரை விளக்கத்திற்கு நீர்ப்புகா தன்மைக்கு உதவும் உற்பத்திகளும் இங்கு சேர்க்கப்பட்டன.
இந்தத் திட்டத்தில் Dulux உற்பத்தி வரிசையிலிருந்து அதிக நீடித்துழைப்புத் திறன் கொண்ட உற்பத்தித் தொகுப்பு பயன்படுத்தப்பட்டது, இதில் Dulux Fungicidal Wash, Dulux Interior & Exterior Sealer, Dulux AquaTech Max Waterproofing, மற்றும் Dulux WeathershieldPowerflexx ஆகியவை அடங்கும்.
இந்த மறுசீரமைப்புத் திட்டம், AkzoNobel Sri Lankaவின் பரந்த சமூகப் பொறுப்புணர்வு (CSR) திட்டத்தின் ஒரு பகுதியாகும். இது சமூக ஈடுபாடு மற்றும் நாட்டின் கலாசார பாரம்பரியத்தை நிலைத்தன்மையுடன் பாதுகாப்பதில் கவனம் செலுத்துகிறது.



























