Header Logo
Vallibel FD
பல்சுவை
பயணியின் சூட்கேசில் இருந்த முதலை தலை!

Sep 9, 2026 - 06:11 PM

பயணியின் சூட்கேசில் இருந்த முதலை தலை!
Mobitel Inner 1278

இத்தாலியின் துரின் நகரில் உள்ள காசெல்லே விமான நிலையத்தில், பயணி ஒருவரின் சூட்கேசில் இருந்து அழியும் ஆபத்திலுள்ள அபூர்வ வகை முதலையின் தலை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. 

இந்தச் சட்டவிரோத கடத்தல் தொடர்பாக முதலையின் தலையை வைத்திருந்த இத்தாலிய நபர் மீது அந்நாட்டு அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். 

அமெரிக்காவின் மியாமியிலிருந்து இஸ்தான்புல் வழியாக இத்தாலியின் துரின் விமான நிலையத்திற்கு அந்த நபர் வந்து இறங்கினார். 

சர்வதேச அளவில் அழியும் நிலையிலுள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களின் சட்டவிரோத வர்த்தகத்தைக் கட்டுப்படுத்த, இத்தாலியின் நிதி பொலிஸ் படையினரும் சுங்கத்துறை அதிகாரிகளும் இணைந்து தீவிர சோதனையில் ஈடுபட்டிருந்தனர். 

அப்போது, அந்நபரின் சாமான்களை சோதனை செய்தபோது முதலையின் தலை கண்டுபிடிக்கப்பட்டது. 

அதிகாரிகளின் கூற்றுப்படி, அந்த முதலையின் தலை முழுமையாக உலர்த்தப்பட்டு, சாதாரண பேக்கிங் பேப்பரால் சுற்றப்பட்டிருந்தது. 

இதனால் அவர் அமெரிக்காவின் பாதுகாப்பு சோதனைகளில் சிக்காமல் எளிதாக ஏமாற்றி எடுத்து வந்துள்ளார். 

முறையான சான்றிதழ்கள் அல்லது உரிமம் ஏதுமின்றி, பாதுகாக்கப்பட்ட வனவிலங்குப் பகுதியைச் சேர்ந்த முதலையைக் கடத்தியதாக அந்தப் பயணி மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

அவர் மீதான குற்றம் நிரூபிக்கப்பட்டால் சுமார் 2.20 கோடி ரூபா (இந்திய மதிப்பில்) அபராதம் விதிக்கப்படலாம். அல்லது 6 மாதங்கள் முதல் 1 ஆண்டு வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளது. 

அழியும் நிலையிலுள்ள விலங்குகளை சட்டவிரோத வர்த்தகத்தில் இருந்து பாதுகாப்பதற்காக 1973 இல் கையெழுத்திடப்பட்ட 'வாஷிங்டன் உடன்படிக்கையின்' கீழ் முதலைகள் பாதுகாக்கப்படும் விலங்கினப் பட்டியலில் உள்ளன. 

அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள நினைவுப் பரிசு கடைகளில் இதுபோன்ற காய்ந்த முதலை தலைகள் பொதுவாக விற்கப்பட்டாலும், அவற்றை சர்வதேச எல்லைகளுக்குக் கடத்துவது சட்டப்படி குற்றமாகும். பல சுற்றுலாப் பயணிகள் இது தெரியாமல் வாங்கி வந்து சிக்கலில் மாட்டிக் கொள்வதாக அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
பெருந்தோட்ட நிறுவனத்திடம் நீங்கள் விலை போய்விட்டீர்கள்!

பெருந்தோட்ட நிறுவனத்திடம் நீங்கள் விலை போய்விட்டீர்கள்!

அழிக்கப்பட்ட இனத்தின் அலறல் குரல் இன்று கர்மாவாக உருவெடுத்துள்ளது!

அழிக்கப்பட்ட இனத்தின் அலறல் குரல் இன்று கர்மாவாக உருவெடுத்துள்ளது!

நல்லூரான் அருள்மழையில் நனைந்த மகோற்சவத் தேர்த்திருவிழா!

நல்லூரான் அருள்மழையில் நனைந்த மகோற்சவத் தேர்த்திருவிழா!

இரண்டு வருடங்களில் 50 வீடுகள் தான் வழங்கப்பட்டுள்ளது!

இரண்டு வருடங்களில் 50 வீடுகள் தான் வழங்கப்பட்டுள்ளது!

அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

இலங்கையில் டிக்டொக் செயலியைத் தடை செய்ய வேண்டும்!

இலங்கையில் டிக்டொக் செயலியைத் தடை செய்ய வேண்டும்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

Mobitel 1278