Sep 9, 2026 - 01:50 PM

கல்வி, மருத்துவச் சிறப்பு மற்றும் தொழில்துறை கூட்டு ஆகியவற்றின் மூலம் நாட்டின் எதிர்கால அறுவை சிகிச்சை பணியாளர்களை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டு இந்த போட்டி நடாத்தப்பட்டது இலங்கையின் எதிர்கால சுகாதாரப் பணியாளர்களைக் கல்வி, மருத்துவச் சிறப்பு மற்றும் தொழில்துறை கூட்டு ஆகியவற்றின் மூலம் மேம்படுத்துவதற்கான தனது அர்ப்பணிப்பை வலுப்படுத்தும் வகையில், இளங்கலை மருத்துவ மாணவர்களுக்கான நாட்டின் முதலாவது தேசிய அறுவை சிகிச்சை தையல் போட்டிக்கு ஆதரவளிப்பதற்காக Sunshine Medical Devices (SMD) நிறுவனம், இலங்கை பிளாஸ்டிக், மறுசீரமைப்பு மற்றும் அழகியல் அறுவைசிகிச்சை நிபுணர்கள் சங்கத்துடன் (Sri Lanka Association of Plastic, Reconstructive and Aesthetic Surgeons - SLAPRAS) கைகோர்த்துள்ளது.
Master of Precision Suturing Championship போட்டியானது, இலங்கை முழுவதிலும் உள்ள 11 மருத்துவப் பீடங்களைச் சேர்ந்த நான்காம் ஆண்டு மருத்துவ மாணவர்களை ஒன்றிணைத்தது; மருத்துவப் பயிற்சியின் ஆரம்பக் கட்டத்திலேயே நடைமுறை அறுவை சிகிச்சைத் திறன்களை வலுப்படுத்தும் அதே வேளையில், வளர்ந்து வரும் திறமையாளர்களை அடையாளம் காண்பதற்கான ஒரு தேசிய தளம் இதனூடாக உருவாகியுள்ளது.
Sunshine Healthcare Lanka Ltd நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரமுடைய பணிப்பாளரும், சன்ஷைன் மெடிக்கல் டிவைசஸ் மற்றும் லினா மேனுஃபேக்ச்சரிங் ஆகியவற்றின் பிரதம நிறைவேற்று அதிகாரியுமான கலாநிதி ரி. சயந்தன் கூறுகையில், “இந்த கூட்டு முயற்சியானது தொழில்நுட்பம் மற்றும் மனித வளம் ஆகிய இரண்டிலும் நீண்டகால முதலீட்டை மேற்கொள்வதன் மூலம் இலங்கையின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் சன்ஷைன் ஹெல்த்கெயார் நிறுவனத்தின் பரந்த தொலைநோக்குப் பார்வையை பிரதிபலிக்கின்றது என்றார். “சுகாதாரத் துறையின் மாற்றம் என்பது வெறும் புத்தாக்கங்களால் மாத்திரமன்றி, சிகிச்சையை வழங்கும் நிபுணர்களின் திறன்களாலும் வழிநடத்தப்படுகிறது. இந்த முன்னோடி முயற்சியில் SLAPRAS அமைப்புடன் கைகோர்ப்பதன் மூலம், நிபுணர்களிடமிருந்து கற்றுக்கொள்வதற்கும், நடைமுறைத் திறன்களை வலுப்படுத்துவதற்கும், மருத்துவச் சிறப்பின் உயரிய தரநிலைகளை எட்டுவதற்கும் வாய்ப்புகளை வழங்கி, எதிர்கால எதிர்காலத்தில் நோயாளிகளுக்கு சிறந்த சிகிச்சைகளை வழங்குவதற்கு, இன்றே சுகாதாரத் துறை சார்ந்த திறமைகளை வளர்ப்பது அவசியமாகும். என அவர் குறிப்பிட்டார்.
ஒரு போட்டியாகவும் கற்றல் அனுபவமாகவும் வடிவமைக்கப்பட்ட இந்த திட்டத்தின் மூலம், முன்னணி பிளாஸ்டிக் மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர்களின் நேரடி வழிகாட்டுதலுடன், நவீன அறுவை சிகிச்சை நடைமுறையின் தரநிலைகள், ஒழுக்கம் மற்றும் துல்லியம் குறித்து பங்கேற்பாளர்களுக்குப் பயிற்சியளிக்கப்பட்டது. திசுக்களைக் கையாளுதல், கருவி கட்டுப்பாடு, முடிச்சுப் பாதுகாப்பு மற்றும் தையல் நுட்பம் ஆகியவற்றின் அடிப்படையில் போட்டியாளர்கள் மதிப்பீடு செய்யப்பட்டனர்.
இந்த முயற்சி குறித்து, பிளாஸ்டிக் மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணரும், இலங்கை பிளாஸ்டிக், மறுசீரமைப்பு மற்றும் அழகியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கத்தின் (SLAPRAS) தலைவருமான Dr. Yasas Abeywickrama கூறுகையில்: “இந்த முயற்சியானது தொழில்நுட்பத் திறனை இதன்மூலம் அறுவை சிகிச்சை சிறப்புக்களை வரையறுக்கும் கைவினைத்திறன், ஒழுக்கம் மற்றும் தொழில்முறை தரங்களை வளர்ப்பதற்கு சந்தர்ப்பம் கிடைக்கின்றது, மாணவர்களுக்கு ஆரம்பக் கட்டத்திலேயே முறையான திறன்களின் வளர்ச்சி மற்றும் நிபுணர்களின் வழிகாட்டுதலை வழங்குவதன் மூலம், வளர்ந்து வரும் சுகாதாரத் தேவைகளைப் பூர்த்தி செய்ய அடுத்த தலைமுறையின் அறுவை சிகிச்சை நிபுணர்களைத் தயார்படுத்த நாங்கள் ஒத்துழைப்பு வழங்குகின்றோம்.” என தெரிவித்தார்.
இளங்கலை மருத்துவக் கல்வியின் நடைமுறைத் திறன்களை மேம்படுத்தி, வழிகாட்டுதல் மற்றும் செயல்திறன் சார்ந்த கற்றல் மூலம் ஒரு தேசிய தளத்தை உருவாக்கும் நோக்கில், பிளாஸ்டிக் மற்றும் மறுசீரமைப்பு அறுவை சிகிச்சை நிபுணர் டொக்டர் கயான் ஏக்கநாயக்க இந்த முயற்சியை முன்னெடுத்துள்ளார். இந்தத் திட்டம் தத்துவார்த்தக் கல்வியோடு மாணவர்களின் நேரடிப் பயிற்சிக்கும் முக்கியத்துவம் அளித்து, நாட்டின் மருத்துவக் கல்வியை வலுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இளங்கலை மருத்துவ மாணவர்கள் முறையான அறுவை சிகிச்சை திறன் பயிற்சி, நிபுணர்களின் வழிகாட்டுதல் மற்றும் நடைமுறை மதிப்பீடுகளின் மூலம் பயனடைவதற்கான வாய்ப்புகளை விரிவுபடுத்தும் நோக்குடன், சாம்பியன்ஷிப் போட்டியை ஒரு வருடாந்த தேசிய திட்டமாக நிலைநிறுத்த இலங்கை பிளாஸ்டிக், மறுசீரமைப்பு மற்றும் அழகியல் அறுவை சிகிச்சை நிபுணர்கள் சங்கம் (SLAPRAS) உத்தேசித்துள்ளது.
இந்த கூட்டு முயற்சியின் மூலம், Sunshine Medical Devices நிறுவனம் மருத்துவக் கண்டுபிடிப்புகளில் முதலீடு செய்வதுடன் மட்டுமன்றி, நாட்டின் எதிர்கால மருத்துவத் தலைவர்களின் வளர்ச்சியிலும் முதலீடு செய்வதன் மூலம், இலங்கையின் சுகாதாரத் துறையின் முன்னேற்றத்தை ஆதரிப்பதற்கான தனது அர்ப்பணிப்பைத் தொடர்ச்சியாக நிரூபித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.



























