Header Logo
Vallibel FD
சினிமா
4 கல்யாணம் பண்ண உனக்கு திமிரா?

Sep 9, 2026 - 03:43 PM

4 கல்யாணம் பண்ண உனக்கு திமிரா?
Mobitel Inner 1278

பிக்பாஸ் சீசன் 10 நிகழ்ச்சி கடந்த செப்டம்பர் 6 ஆம் திகதி ஆரம்பமாகியது. விஜய் சேதுபதி தொகுத்து வழங்கும் இந்நிகழ்ச்சியில் காமன் மேட் போட்டியில் வெற்றிப்பெற்ற முனியம்மாள் பிக்பாஸ் சீசன் 10 வீட்டிற்குள் போட்டியாளராக சென்றுள்ளார். 

இந்நிலையில் காமன் மேன் போட்டியின் போது முனியம்மாள், வனிதாவிடம் பேசிய விஷயம் தான் தற்போது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. போட்டியாளர் டார்வின், வனிதாவிடம், நீங்க பல திருமணங்கள் பண்ணியிருந்தாலும், உங்க அப்பா விஜயகுமார் பேரை மட்டும் ஏன் விடாம வச்சுருக்கீங்க என்று கேட்டார். 

அதற்கு வனிதா பெத்தவன் அவன் தானே என்று கூற, போட்டியாளர் மணி, உங்களுக்கு ஏன் இவ்வளவு திமிரு என்றதும், நான் விஜயகுமாரோட பொண்ணுடா! என்று வனிதா பதிலளித்தார். 

அதன்பின் பேசிய முனியம்மா, நீங்க ஒரு தமிழ் பெண் தானே? அப்போவோட திமிரு இருக்குனு சொன்னீங்க என்று கேட்க, கடுப்பான வனிதா, தமிழை முதல்ல ஒழுங்கா சொல்லு, அதைக்கூட சொல்ல தெரியாம என்ன கேள்வி கேட்க வந்துட்ட என்றார். 

உடனே முனியம்மா, நான் தமிழை ஒழுங்கா சொல்றேனோ இல்லையோ, ஆனா உனக்கு உங்க சொந்த வாழ்க்கையை ஒழுங்கா வாழத் தெரியலையே, எதற்காக 4 பேரை கல்யாணம் பண்ணீங்க என்று மேடையிலேயே கேட்டுள்ளார். 

ஆத்திரத்தின் உச்சிக்கே சென்ற வனிதா, உங்க புருஷன், பொண்டாட்டி, அப்பன் பேர்லாம் எனக்கு தெரியாது, தேவையும் இல்லை, ஆனா என் அடையாளம் என்னன்னு எனக்கு நல்லாவே தெரியும். அதுதான் என் ஐடெண்டிட்டி, இதற்கு மேல என் பர்சனல் வாழ்க்கையை பத்தி பேசினீங்கன்னா, உங்களைவிட ஒரு கேவலமான ஜந்து இந்த உலகத்திலையே இருக்க முடியாது என்று விளாசியுள்ளார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
நல்லூரான் அருள்மழையில் நனைந்த மகோற்சவத் தேர்த்திருவிழா!

நல்லூரான் அருள்மழையில் நனைந்த மகோற்சவத் தேர்த்திருவிழா!

இரண்டு வருடங்களில் 50 வீடுகள் தான் வழங்கப்பட்டுள்ளது!

இரண்டு வருடங்களில் 50 வீடுகள் தான் வழங்கப்பட்டுள்ளது!

அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

அராலியில் பெருக்கெடுத்த கிணறுகள்!

இலங்கையில் டிக்டொக் செயலியைத் தடை செய்ய வேண்டும்!

இலங்கையில் டிக்டொக் செயலியைத் தடை செய்ய வேண்டும்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

எனது மரணம் வரை ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியுடன் தான் பயணிப்பேன்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

பயங்கரவாதத் தடைச்சட்டத்தைப் பற்றி ஏன் இதுவரை பேசவில்லை?

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

கடும் நடவடிக்கை எடுக்குமாறு சத்தியலிங்கம் வலியுறுத்தல்!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

ஊழல்வாதிகள் யாராக இருந்தாலும் தப்ப முடியாது!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

கம்பளை பிரதான வீதியின் நிலச்சரிவு!

தண்டாயுதபாணி உற்சவம்!

தண்டாயுதபாணி உற்சவம்!

Mobitel 1278