Sep 11, 2026 - 07:55 AM

ஈரான் மற்றும் அமெரிக்காவிற்கு இடையிலான போர் பதற்றம் தீவிரமடைந்துள்ளதன் காரணமாக உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சடுதியாக உயர்ந்து வருகின்றது.
இதன்படி, இன்று (11) காலை வேளையில் உலகச் சந்தையின் முக்கிய எண்ணெய் குறியீடான பிரெண்ட் (Brent) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 108 அமெரிக்க டொலர்களையும் கடந்து பதிவாகியுள்ளது.
இது கடந்த மே மாதத்திற்கு பின்னர் பதிவாகும் அதிகூடிய விலையாகும்.
கடந்த ஜூலை 24 ஆம் திகதிக்குப் பிறகு, கடந்த 9 ஆம் திகதி பிரெண்ட் கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 100 டொலர் எல்லையைக் கடந்த நிலையில், அன்றிலிருந்து தொடர்ச்சியாக இவ்வாறு எண்ணெய் விலை உயர்ந்து வருகின்றது.
பிரெண்ட் எண்ணெய் விலை உயர்வுக்கு இணையாக, அமெரிக்காவின் வெஸ்ட் டெக்சாஸ் இன்டர்மீடியேட் (WTI) கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலையும் 103.34 டொலராக உயர்ந்துள்ளது.
அத்துடன், மேர்பன் (Murban) ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 122.48 டொலராகப் பதிவாகியுள்ளது.





























