Sep 11, 2026 - 09:30 AM

சபாநாயகர் தலைமையில் பாராளுமன்ற நடவடிக்கைகள் தற்போது ஆரம்பமாகியுள்ளன.
இன்றைய பாராளுமன்ற நடவடிக்கைகள்,
மு.ப. 09.30 - மு.ப. 10.00 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 22(1) முதல் (6) வரையின் பிரகாரம் பாராளுமன்ற அலுவல்கள்.
மு.ப. 10.00 - மு.ப. 11.00 வாய்மூல விடைக்கான வினாக்கள்.
மு.ப. 11.00 - மு.ப. 11.30 பாராளுமன்ற நிலையியற் கட்டளை 27(2) இன் கீழ் வினாக்கள்.
மு.ப. 11.30 - பி.ப. 5.00 பின்வரும் தனியார் உறுப்பினர் பிரேரணைகள் பிரேரிக்கப்படவுள்ளன,
(i) பெற்றோலியம், எரிபொருள் மற்றும் நீர் ஆகியவற்றுடன் தொடர்புடைய கைத்தொழில்களை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் ஒழுங்குபடுத்தலின் கீழ் கொண்டு வருதல் (நலீன் பண்டார ஜயமஹ).
(ii) இலங்கையில் குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிப்பதற்காக குடும்பங்களுக்கு ஊக்குவிப்புத் தொகையை வழங்குதல் (அஜித் பி. பெரேரா).
(iii) தியகம வனத்தைப் பாதுகாத்தல் ((கலாநிதி) ஹர்ஷ த சில்வா).
(iv) பிரிவென ஆசிரியர்களின் ஓய்வூதியத்திற்காக அவர்களின் ஊதியத்திலிருந்து கூடுதலாக ஆறு சதவீதத் தொகையை அறவிடுவதை நிறுத்துதல் (சுஜீவ திசாநாயக்க).
(v) மலைப்பாங்கான பிரதேசங்களில் உணவுப் பயிர்களைப் பயிரிடுதல் (நந்த பண்டார).
(vi) கித்துள் கைத்தொழிற்றுறையை முன்னேற்றுதல் (ரீ.கே. ஜயசுந்தர).
(vii) இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்திற்கு மருத்துவ பீடமொன்றை நிறுவுதல் ((கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ்).
பி.ப. 5.00 - பி.ப. 5.30 ஒத்திவைப்பு வேளையின் போதான வினாக்கள்.
அதன் நேரடி ஔிப்பரப்பை கீழே காணலாம்,





























