Sep 11, 2026 - 11:34 AM

விஜய் தொலைக்காட்சியில் ஏகப்பட்ட ரியாலிட்டி ஷோக்கள் ஒளிபரப்பாகி வருகிறது.
அதில் ரசிகர்களால் அதிகம் பார்க்கப்படும் ஒரு நிகழ்ச்சியாக உள்ளது பிக்பாஸ், இதன் 10 ஆவது சீசன் கடந்த செப்டம்பர் 6 ஆம் திகதி படு பிரம்மாண்டமாக துவங்கப்பட்டது. 105 நாட்கள் ரசிகர்களுக்கான புல் என்டர்டெயின்மென்ட் நிகழ்ச்சியாக பிக்பாஸ் 10 ஆவது சீசன்.
எப்போது என்ன நடக்கும் என்றே தெரியவில்லை, அதிரடி விஷயங்களாக அடுத்தடுத்து நடக்கிறது. நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளே பிக்பாஸ் மேடையில் நிறைய புதுபுது விஷயங்கள் நடந்தன, ரசிகர்களே என்னடா இது என வியப்பாக பார்த்தார்கள்.
நாம் தினமும் தொலைக்காட்சியில் பார்த்து பழகிய சீரியல் பிரபலங்கள் எல்லாம் இந்நிகழ்ச்சியில் உள்ளனர்.
சீரியல்கள், படங்கள் என நடித்து பிரபலமான பிளாக் பாண்டி சமீபத்தில் உடல்நலக் குறைவால் நிகழ்ச்சியில் இருந்து வெளியேற்றப்பட்டார். அவர் வெளியேறியது நினைத்து போட்டியாளர் அனைவருமே கண்ணீர் வடித்தனர்.
இந்த நிலையில் பிக்பாஸ் 10 ஆவது சீசனில் இருந்து Savinya வெளியேறியுள்ளார்.





























