Sep 11, 2026 - 03:15 PM

American Premium Water நிறுவனம், அண்மையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த Dragons of Sri Lanka விருதுகள் 2026 இல் நான்கு விருதுகளை சுவீகரித்திருந்தது. இதில் மூன்று Gold Dragons மற்றும் ஒரு Black Dragon ஆகிய விருதுகள் அடங்கியிருந்தன. கடந்த ஆண்டு வர்த்தக நாமம் மீள அறிமுகம் செய்யப்பட்டிருந்ததைத் தொடர்ந்து இது ஒரு முக்கியத்துவம் வாய்ந்த மைல்கல்லாக அமைந்திருந்தது.
பெருமைக்குரிய Dragons of Asia விருதுகளின் அங்கமாக அமைந்துள்ள Dragons of Sri Lanka, நிகழ்வின் பிராந்திய கட்டமைப்பை உள்நாட்டு சந்தைக்கு கொண்டு வருவதுடன், புத்தாக்க மற்றும் வினைத்திறனான சந்தைப்படுத்தல் தொடர்பாடல்களை கொண்டாடும் வகையில் அமைந்துள்ளது. இந்த விருதுகளுக்காக கிடைத்திருந்த விண்ணப்பங்கள் மூலோபாய சிந்தனை, ஆக்கத்திறன், நிறைவேற்றம் மற்றும் தாக்கம் போன்றவற்றுக்காக மதிப்பாய்வு செய்யப்பட்டிருந்தது. 2000 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட Dragons of Asia, ஆசியாவின் முன்னணி பெறுபேறுகள் அடிப்படையிலான சந்தைப்படுத்தல் விருதுகள் வழங்கும் நிகழ்வுகளில் ஒன்றாக அமைந்துள்ளது.
American Premium Water நிறுவனத்தைப் பொறுத்தவரை, Dragons awards தனது முதல் அறிமுகத்தில் நான்கு வெவ்வேறான பிரிவுகளில் நான்கு Dragons விருதுகளை வென்றெடுத்துள்ளது மிகவும் குறிப்பிடத்தக்க சாதனையாகும். Gold Dragons பிரிவில், தயாரிப்பு அறிமுகம் அல்லது மீளறிமுகம் (Product Launch or Re Launch), சமூக நோக்கம், சூழலியல் அல்லது நிலைத்தன்மை (Cause, Environment or Sustainability) மற்றும் ஆக்கப்பூர்வமான சிறப்புத்தன்மை (Creative Excellence) ஆகிய மூன்று பிரிவுகளின் கீழ் American Premium Water கௌரவிப்பைப் பெற்றது. அத்துடன், குறைந்த செலவுத் திட்டம் பிரிவில் Black Dragon விருதையும் சுவீகரித்தது.
இலங்கையின் முன்னணி வர்த்தக நாமங்கள் மற்றும் முகவர் நிறுவனங்களுடன் போட்டியிட்டு, American Premium Water நிறுவனம் பெற்ற இந்த நான்கு வெற்றிகளும் அதன் சமீபத்திய செயல்பாடுகளின் வலிமையையும் செயல்திறனையும் எடுத்துக்காட்டுகின்றன. மூன்று வெவ்வேறான பிரிவுகளில் மூன்று Gold Dragons விருதுகளை வென்றிருப்பது அந்த வர்த்தக நாமத்தின் சாதனைகளின் பரந்த தன்மையை வெளிப்படுத்துகிறது. அத்துடன், குறைந்த செலவுத் திட்டத்திற்கான Black Dragon விருதானது, இலக்கு சார்ந்த மற்றும் திறமையான முதலீட்டின் மூலம் அர்த்தமுள்ள தாக்கத்தை உருவாக்கும் அதன் திறனை மேலும் வலியுறுத்துகிறது.
2025 ஆம் ஆண்டில் American Premium Water வர்த்தக நாமம் மீளறிமுகம் செய்யப்பட்ட ஒரு வருடத்திற்குச் சற்றுப் பிந்தைய காலத்தில் இந்த சாதனைகள் எட்டப்பட்டுள்ளன. இது, அந்நிறுவனம் தனது சந்தை நிலையை வலுப்படுத்தவும், அதிக முக்கியத்துவத்தைக் கட்டியெழுப்பவும், வாடிக்கையாளர்களுடன் அர்த்தமுள்ள தொடர்புகளை உருவாக்கவும் முயலும் வேளையில், அதன் புதியதொரு அத்தியாயத்தைக் குறிப்பதாக அமைந்துள்ளது. தயாரிப்பு அறிமுகம் அல்லது மீளறிமுகத்திற்கான Gold Dragon விருது, வர்த்தக நாமத்தின் வெற்றிகரமான மறுமலர்ச்சியையும் அதன் புதுப்பிக்கப்பட்ட சந்தை நிலையையும் உறுதிப்படுத்துகிறது. சமூக நோக்கம், சூழலியல் அல்லது நிலைத்தன்மைக்கான (Cause, Environment or Sustainability) Gold Dragon விருது, அதன் நோக்கம் சார்ந்த செயல்பாடுகளின் தாக்கத்தை அங்கீகரிக்கிறது. அத்துடன், ஆக்கப்பூர்வமான சிறப்புத்தன்மைக்கான (Creative Excellence) Gold Dragon விருது, வர்த்தக நாமத்தின் புதுப்பிக்கப்பட்ட கருத்தாக்கத்திற்கு உயிர் கொடுப்பதில் பங்களித்த ஆக்கப்பூர்வமான பணிகளின் வலிமையை வெளிப்படுத்துகிறது.
American Premium Water இன் பிரதம நிறைவேற்று அதிகாரி/பணிப்பாளர் பயாஸ் பசால் கருத்துத் தெரிவிக்கையில், “இந்த சாதனைகள் குறித்து நாம் மிகவும் பெருமிதம் கொள்கிறோம். மூன்று தங்க விருதுகள் மற்றும் ஒரு கருப்பு விருது உட்பட நான்கு Dragons களை வென்றிருப்பது, இந்தப் பணியில் செலுத்தப்பட்ட மூலோபாய சிந்தனை, ஆக்கத்திறன், ஆர்வம் மற்றும் அர்ப்பணிப்பு ஆகியவற்றுக்குக் கிடைத்த ஒரு சிறந்த அங்கீகாரமாகும். இந்த விருதுகள், குழுப்பணியின் வலிமைக்கும், நமது குழுக்களுக்கும் நமது முகவர் பங்காளர்களான Phoenix Ogilvy மற்றும் Shift Integrated ஆகியவற்றிற்கும் இடையிலான வலிமையான பங்காண்மைக்கும் ஒரு சான்றாகும்.” என்றார்.
American Premium Water நிறுவனம் தரம், கண்டுபிடிப்பு மற்றும் நேர்மறையான மாற்றத்தை ஏற்படுத்துதல் ஆகியவற்றை மையமாகக் கொண்டு தனது வர்த்தக நாமத்தைத் தொடர்ந்து கட்டியெழுப்பி வருகிறது. OrphanCare உடனான தனது பங்காண்மை மூலம், இந்நிறுவனம் 90 க்கும் மேற்பட்ட அனாதை இல்லங்களுக்கு ஆதரவளித்து வருகிறது. கடந்த பத்தாண்டுகளில், போதிய வசதிகளற்ற சமூகங்களுக்கு 800,000 லீட்டருக்கும் அதிகமான சுத்தமான குடிநீரை இந்நிறுவனம் நன்கொடையாக வழங்கியுள்ளது. மேலும், இதன் விளையாட்டுத் துறை சார்ந்த பங்காண்மைகள், 1.6 மில்லியனுக்கும் அதிகமான தனிநபர்கள் ஆரோக்கியமான மற்றும் சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை வழிநடத்த ஊக்கமளிக்க உதவியுள்ளன.
சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் சமூக உள்ளடக்கம் ஆகிய நிகழ்ச்சி நிரல்களை இந்நிறுவனம் தொடர்ந்து முன்னெடுத்து வருகிறது. இதில் சுற்றுச்சூழல்-நட்புமிக்க கண்ணாடிப் போத்தலின் அறிமுகமும், சமூகங்களுக்கு அதிக வாய்ப்புகளை உருவாக்கும் திட்டங்களும் அடங்கும். இந்த நான்கு Dragons விருதுகளும் American Premium Water நிறுவனத்தின் பயணத்தில் ஒரு முக்கியமான மைல்கல்லைக் குறிக்கின்றன. மேலும், வர்த்தக நாமம் தனது புதுப்பிக்கப்பட்ட சந்தை நிலையையும் எதிர்கால இலட்சியத்தையும் தொடர்ந்து கட்டியெழுப்பி வரும் நிலையில், இது அதற்கான வலுவான உந்துதலையும் வழங்குகிறது.





























