Header Logo
Vallibel FD
Selan Bank
செய்திகள்
போதுமான அந்நியச் செலாவணிக் கையிருப்பு ஆடம்பரமல்ல!

Sep 11, 2026 - 04:28 PM

போதுமான அந்நியச் செலாவணிக் கையிருப்பு ஆடம்பரமல்ல!
Mobitel Inner 1278

போதுமான அந்நியச் செலாவணிக் கையிருப்பை பேணுவது ஒரு ஆடம்பரமல்ல, மாறாக அது பேரண்ட பொருளாதார நிலைத்தன்மையின் இன்றியமையாத அங்கமாகும் என மத்திய வங்கி ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க தெரிவித்தார். 

கொழும்பில் நேற்று (11) நடைபெற்ற இலங்கை மத்திய வங்கியின் வெளிநாட்டுச் சேமிப்பு முகாமைத்துவ மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ஆளுநர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். 

"வெளிநாட்டுப் பாதுகாப்பு நடவடிக்கைகள் போதுமானதாக இல்லாதபோது என்ன நடக்கும் என்பதை, 2022ஆம் ஆண்டில் நாம் முகம்கொடுத்த பொருளாதார நெருக்கடி மிகத் தெளிவாகவும் நடைமுறையிலும் எடுத்துக்காட்டியுள்ளது. வெளிநாட்டுச் சேமிப்புகள் மிகக் குறைந்த மட்டத்திற்கு வீழ்ச்சியடையும்போது, அதன் விளைவுகள் மத்திய வங்கியின் நிதி அறிக்கைகள் அல்லது சேமிப்பு முகாமைத்துவப் பொறுப்புகளையும் தாண்டிச் செல்கின்றன. இறக்குமதி நடவடிக்கைகள் மட்டுப்படுத்தப்படுகின்றன, கடன்களைத் திருப்பிச் செலுத்துவது கடினமாகிறது, நாணய மாற்று விகித அழுத்தங்கள் அதிகரிக்கின்றன. பணவீக்க அழுத்தங்கள் அதிகரிக்கக்கூடும். அத்துடன், பொருளாதாரமும் நாடும் மீதான நம்பிக்கையும் சீர்குலைந்து போகலாம். 2022 நெருக்கடி காலப்பகுதியில் இந்த விளைவுகளை நாம் மிகக் கடினமான அனுபவங்களாக எதிர்கொள்ள நேரிட்டது. முக்கியமானது என்னவென்றால், இருந்த கொள்கை ரீதியான வெளியும் கடுமையாகக் கட்டுப்படுத்தப்பட்டமையாகும். எனவே, அதிலிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய பாடம் தெளிவாக உள்ளது. போதுமான அளவு வெளிநாட்டுச் சேமிப்பைப் பேணுவது என்பது ஆடம்பரமான விடயமல்ல. அது பேரண்ட பொருளாதார ஸ்திரத்தன்மையின் அவசியமான அங்கமாகும். நடைமுறையில், சேமிப்புகளைத் திரட்டுவது சிக்கலான ஒரு விடயமாகும். ஏனெனில் நல்ல காலங்கள் எப்போதும் நிலைத்திருப்பதில்லை, கடினமான காலப்பகுதிகளும் ஏற்படக்கூடும்" என்றார்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

செப்சிஸ் அறிகுறிகளை இவ்வாறு இனம் காண முடியும்!

செப்சிஸ் அறிகுறிகளை இவ்வாறு இனம் காண முடியும்!

Mobitel 1278