Header Logo
Vallibel FD
Selan Bank
வடக்கு
சாவற்கட்டு மீன்பிடித் துறைமுகம் புனரமைப்பு ஆரம்பம்!

Sep 11, 2026 - 03:46 PM

சாவற்கட்டு மீன்பிடித் துறைமுகம் புனரமைப்பு ஆரம்பம்!
Mobitel Inner 1278

டித்வா புயலினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருந்த காக்கைத்தீவு சாவற்கட்டு கடற்றொழிலாளர் சங்கத்தின் இறங்குதுறையைப் புனரமைக்கும் பணிகள், கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அவர்களால் நேற்று (10) உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. 

சாவற்கட்டு கடற்றொழிலாளர்களின் நீண்டகால கோரிக்கைக்கு அமைவாக, அமைச்சரிடம் முன்வைக்கப்பட்ட வேண்டுகோளைத் தொடர்ந்து, கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் உள்ளிட்ட சம்பந்தப்பட்ட அரச திணைக்களங்களிடமிருந்து உரிய அனுமதிகள் பெறப்பட்டதையடுத்து, கடற்றொழில் அமைச்சினால் முதற்கட்டமாக 2.1 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 

இதனடிப்படையில், இறங்குதுறையில் தேங்கியுள்ள பாசிகளை அகற்றி தூய்மைப்படுத்துதல், மண் நிரப்பி இறங்குதுறையைச் சீரமைத்தல் உள்ளிட்ட பணிகள் முன்னெடுக்கப்படவுள்ளதுடன், கடற்றொழிலாளர்கள் எவ்வித தடையுமின்றி தமது மீன்பிடி நடவடிக்கைகளை மேற்கொள்ளக்கூடிய வகையில் இறங்குதுறை புனரமைக்கப்படவுள்ளது. 

இறங்குதுறை புனரமைப்புப் பணிகளை ஆரம்பித்து வைக்கும் நிகழ்வில் மாவட்ட அரசாங்க அதிபர் ம. பிரதீபன், பிரதேச செயலாளர், கடற்றொழில், நீரியல் வளங்கள் திணைக்களத்தின் உதவிப் பணிப்பாளர் அகிலன் உள்ளிட்ட கடற்றொழில் திணைக்கள அதிகாரிகள், யாழ். மாவட்ட ஒருங்கிணைப்புக் குழு அலுவலகத்தின் இணைப்பாளரும் யாழ்ப்பாண மாநகர சபை உறுப்பினருமான சுந்தரமூர்த்தி கபிலன், கரையோர பாதுகாப்பு மற்றும் கரையோர வள முகாமைத்துவ திணைக்களம் மற்றும் ஏனைய அரச திணைக்களங்களின் அதிகாரிகள், பிரதேச சபை உறுப்பினர்கள், கடற்றொழிலாளர் சங்க நிர்வாகிகள் மற்றும் சாவற்கட்டு பகுதியைச் சேர்ந்த பெருமளவான கடற்றொழிலாளர்கள் கலந்து கொண்டனர்.

Disclaimer: All the comments will be moderated by the AD editorial. Abstain from posting comments that are obscene, defamatory or slanderous. Please avoid outside hyperlinks inside the comment and avoid typing all capitalized comments. Help us delete comments that do not follow these guidelines by flagging them (mouse over a comment and click the flag icon on the right side). Do use these forums to voice your opinions and create healthy discourse.

Comments

0
Comments are disabled

Note: Due to legal constraints, the Ada Derana Editorial team has taken a decision to disable comments on all articles concerning ongoing court procedures.


MOST READ

காணொளி
பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

பாராளுமன்றில் ஜீவன் - கலைச்செல்வி காரசாரமான விவாதம்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

மாணவி தற்கொலைக்கு முயற்சி செய்தது தொடர்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும்!

நல்லூர் கொடியிறக்கம்!

நல்லூர் கொடியிறக்கம்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

பொய்களைக் கூறி மக்களின் காணிகளை அபகரிக்க முயற்சி செய்கின்றனர்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

குறிஞ்சித் தமிழ் வித்தியாலயத்தை மீளத் திறக்கக் கோரி போராட்டம்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

சீதா அம்மன் ஆலயத்தில் இந்திய பாதுகாப்பு அமைச்சர்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

கொழும்பில் இருந்துகொண்டு குறைகளைச் சொல்கிறார்கள்!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

ஹிஸ்புல்லா கோரிக்கை!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

முஸ்லிம் பெண்கள் கல்வியில் முன்னேற்றம் அடைந்து வருகின்றனர்!

செப்சிஸ் அறிகுறிகளை இவ்வாறு இனம் காண முடியும்!

செப்சிஸ் அறிகுறிகளை இவ்வாறு இனம் காண முடியும்!

Mobitel 1278